சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா XZ2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்சமயம் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் Xperia XZ2 மாடலில் அப்டேட் செய்யப்பட மோஷன் ஐ கேமரா தொழில்நுட்பம், அதிக ரெசல்யூஷன் ஆடியோ மற்றும் முன்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP65/ 68, ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளேக்கள் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுளின் AR . கோர் மற்றும் கூகுள் லென்ஸ் இமேஜிங் அம்சம் வழங்கப்பட்டுகிறது.
சோனி Xperia XZ2 சிறப்பம்சங்கள்:
– 5.7 இன்ச் 2160×1080 பிக்சல் 18:9 டிரைலூமினஸ் HDR டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்ன்பாடிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– வாட்டர் ரெசிஸ்டன்ட் IP65/IP68
– 19 எம்பி பிரைமரி கேமரா, எக்சைனோஸ் RS சென்சார், 1/2.3″ சென்சார், f/2.0
– 5 எம்பி செல்ஃபி கேமரா, 1/ 5″ எக்ஸ்மோர் RS சென்சார், 23mm சூப்பர் வைடு-ஆங்கில், f/2.2
– யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3180 Mah பேட்டரி, நோவோ அடாப்டிவ் சார்ஜிங் தொழில்நுட்பம்
– குவால்காம் க்விக் சார்ஜ் 3.0, Qi வயர்லெஸ் சார்ஜிங்
இந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா XZ2 ஸ்மார்ட்போன் லிக்விட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.72,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சோனி எக்ஸ்பீரியா XZ2 விற்பனை ஆகஸ்டு 1-ம் தேதி முதல் சோனி சென்டர் மற்றும் தேர்வு செய்யப்பட்ட மொபைல் விற்பனையாளர்களிடம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..