சோனி நிறுவனம் அடுத்த வாரம் நடக்க இருக்கும் CES 2019 விழாவில் அதன் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வெளியிடப்போவதாக அதிகார போர்வமாக வெளியிட்டுள்ளது.
அதன்படி சோனியின் புதிய எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 7 ஆம் தேதி மாலை 5.00 மணி (இந்திய நேரப்படி ஜனவரி 8 ஆம் தேதி மாலை 6.30 மணி) அறிமுகம் செய்யப்படுகிறது. இவ்விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற இருக்கிறது.
வழக்கமாக சோனி நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி மாதம் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யும்.
அந்த வகையில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் விழாவில் சோனி நிறுவனம் தனது புதிய என்ட்ரி-லெவல் மற்றும் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களின் அப்டேட் செய்யப்பட மாடல்களை அறிமுகம் செய்யலாம்.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் சோனி நிறுவனம் தனது எக்ஸ்பீரியா XA 2, XA 2. அல்ட்ரா மற்றும் L2 போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது