அதிக ரெசல்யூஷன் கொண்ட ஸ்மார்ட்போன் சோனி IMX586 அறிமுகம்…!

அதிக ரெசல்யூஷன் கொண்ட ஸ்மார்ட்போன் சோனி IMX586 அறிமுகம்…!
HIGHLIGHTS

சோனி நிறுவனம் IMX586 என்ற பெயரில் புதிய CMOS இமேஜ் சென்சாரை அறிமுகம் செய்துள்ளது

சோனி நிறுவனம் IMX586 என்ற பெயரில் புதிய CMOS இமேஜ் சென்சாரை அறிமுகம் செய்துள்ளது. இந்த சென்சாரை அதிக பிக்சல் கொண்ட ஸ்மார்ட்போன்களில் வழங்க முடியும் என்பதோடு 0.8μm அளவில் உலகின் முதல் அல்ட்ரா-காம்பேக்ட் பிக்சல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

இதனால் இந்த சென்சாரை 1/2-வகை (8.0 மில்லிமீட்டர் டயகோனல்) சேர்ந்த யூனிட்டில் 48 மெகாபிக்சல்களை வழங்க முடியும். இதில் வழங்கப்பட்டுள்ள குவாட் பேயர் எனும் கலர் ஃபில்ட்டர் புகைப்படங்களை அதிக தரமுள்ளதாகவும், அதிக ரெசல்யூஷனில் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனியின் எக்ஸ்போஷர் கன்ட்ரோல் தொழில்நுட்பம் மற்றும் சிக்னல் பிராசஸிங் அம்சம் இமேஜ் சென்சாரில் பொருத்தப்பட்டுள்ளதால், கன நேரத்தில் அவுட்புட் வழங்குவதோடு, தலைசிறந்த டைனமிக் ரேன்ஜ் வழங்குகிறது. இது வழக்கமான சென்சார்களை விட நான்கு மடங்கு அதிகம் ஆகும்.

சோனி IMX586 சிறப்பம்சங்கள்

பிக்சல் எண்ணிக்கை – 8000 (H) × 6000 (V) 48 மெகாபிக்சல்; படம் அளவு – டயகோணல் 8.000mm (டைப் 1/2)
ஃபிரேம் ரேட் – ஃபுல் – 30fps; திரைப்படம் – 4K (4096×2160) – 90fps, 1080p – 240fps, 720p – 480fps(w/crop)
சென்சிடிவிட்டி (வழக்கமான அளவு: f5.6) –  சரியாக. 133LSB
சென்சார் சாட்யூரேஷன் சிக்னல் அளவு (குறைந்தபட்ச அளவு) – சரியாக. 4500e
வோல்டேஜ் – அனலாக் 2.8V, 1.8V; டிஜிட்டல் 1.1V; இன்டர்ஃபேஸ் 1.8V
முக்கிய அம்சங்கள் – இமேஜ் பிளேன் ஃபேஸ்-வித்தியாசம் AF, HDR இமேஜிங்
வெளிப்பாடு – MIPI C-PHY1.0 (3 trio) / D-PHY 1.2 (4 lane)
கலர் ஃபில்ட்டர் அரே – குவாட் பேயர் அரே
படம் வெளிப்பாடு அமைப்பு – பேயர் RAW

சோனி IMX586 சாம்பிள் விலை 3,000 JPY இந்திய மதிப்பில் ரூ.1,860 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு இந்த சென்சார் செப்டம்பர் 2018 முதல் விநியோகம் செயய்ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo