உலகளவில் காதலை அடையாளப்படுத்தும் நிறமாக சிவப்பு இருக்கிறது. காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்போன்களை சிவப்பு நிறத்தில் ஸ்பெஷல் எடிஷனாக வெளியிட்டுள்ளன. ஸ்பெஷல் எடிஷன் என்பதால் இவை குறுகிய காலத்திற்கு ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
காதலர் தினத்தில் உங்கள் காதலை சிவப்பு நிற பரிசுடன் வெளிப்படுத்த திட்டமா? காதலர் தின ஸ்பெஷல் எடிஷனாக சிவப்பு நிறத்தில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
ஒன்பிளஸ் 5T லாவா ரெட் லிமிட்டெட் எடிஷன்:
– 6.01 இன்ச் 2106×1080 பிக்சல் ஃபுல் எச்டி+ ஆப்டிக் AMOLED 2.5D வளைந்த டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 64-பிட் 10nm பிராசஸர்
– அட்ரினோ 540 GPU
– 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபிஇன்டெர்னல் மெமரி
– ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த ஆக்சிஜன்ஓ.எஸ். 4.7, ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், சோனி IMX398, f/1.7 அப்ரேச்சர், 1.12μm பிக்சல்
– 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், சோனி IMX376K, 1.0μm பிக்சல்
– 16 எ்மபி செல்ஃபி கேமரா, சோனி IMX371 சென்சார், 1.0μm பிக்சல், f/2.0 அப்ரேச்சர்
– கைரேகை ஸ்கேனர்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3300 எம்ஏஎச் பேட்டரி, டேஷ் சார்ஜ்
ஒன்பிளஸ் 5T லாவா ரெட் எடிஷன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் கிடைக்கிறது. இந்தியாவில் லாவா ரெட் எடிஷன் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் விற்பனை ஜனவரி 20-ம் தேதி துவங்கியது.
ஒப்போ எஃப்5 ரெட் எடிஷன்:
– 6.0 இன்ச் 2160×1080 பிக்சல் 18:9 FHD + ஃபுல் ஸ்கிரீன் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P23 16nm பிராசஸர்
– 800MHz ARM மாலி G71 MP2 GPU
– 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.1 (நௌக்கட்) சார்ந்த கலர்ஓ.எஸ். 3.2
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.8 அப்ரேச்சர்
– 20 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர், 1/2.8″ சென்சார்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ஒப்போ எஃப்5 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவி் வோக் நிறுவனத்துடன் இணைந்து வெளியிடப்பட்டது. இந்தியாவில் பத்தாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் வோக் இந்தியா ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. ஒப்போ எஃப்5 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரியில் மட்டும் கிடைப்பதோடு இதன் விலை ரூ.24,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவோ வி7 பிளஸ் இன்ஃபனைட் லவ்:
– 5.99 இன்ச் 1440×720 பிக்சல் 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஃபன்டச் ஓ.எஸ். 3.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட்
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
– 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3225 எம்ஏஎச் பேட்டரி
இந்தியாவில் விவோ வி7 பிளஸ் இன்ஃபனைட் ரெட் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்திலும், ஆஃப்லைன் முறையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு புக் மை ஷோ, ஃபெர்னஸ் என் பெட்டல் வழங்கும் சிறப்பு கூப்பன்கள் மற்றும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.3000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஹானர் 7X சிறப்பம்சங்கள்:
– 5.93 இன்ச் ஃபுல் எச்டி, 1080×2160 பிக்சல் வளைந்த டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 3659 பிராசஸர்
– 4 ஜிபி ரேம்
– 32 / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 16 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– 3340 எம்ஏஎச் பேட்டரி
முழுமையான மெட்டல் வடிவைப்பு கொண்ட புதிய ஹானர் 7X ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் சார்ந்த EMUI 5.1 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் பின்புறம் கைரேகை ஸ்கேனர் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் ஹானர் 7X ரெட் எடிஷன் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.