சாம்சங் Galaxy J4+மற்றும் Galaxy J6+ என இரண்டு ஸ்மார்ட்போன் அறிமுகம்…!

சாம்சங்  Galaxy J4+மற்றும் Galaxy J6+  என இரண்டு ஸ்மார்ட்போன்  அறிமுகம்…!
HIGHLIGHTS

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ6 பிளஸ் மற்றும் கேலக்ஸி ஜெ4 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிவிக்கப்பட்டன.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ6 பிளஸ் மற்றும் கேலக்ஸி ஜெ4 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிவிக்கப்பட்டன. இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்ட இரண்டு  ஸ்மார்ட்போன்களிலும் 6.0 இன்ச்HD  பிளஸ் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, குவாட் கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் இரண்டு ஸ்மார்ட்போன்களில் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கேலக்ஸி ஜெ6 பிளஸ் மாடலின் வலதுபுறம் கைரேகை சென்சார், டூயல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி J6 பிளஸ் சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 1480×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
– அட்ரினோ 308 GPU
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, LED  ஃபிளாஷ், f/1.9
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3300 mah . பேட்டரி

சாம்சங் கேலக்ஸி J4 பிளஸ் சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 1480×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
– அட்ரினோ 308 GPU
– 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
– 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், f/1.9
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
– 4ஜி வோல்ட்இ, wifi ப்ளூடூத்
– 3300 Mah . பேட்டரி

சாம்சங் கேலக்ஸி J6 பிளஸ் கிரே, பிளாக் மற்றும் ரெட் உள்ளிட்ட நிறங்களிலும், கேலக்ஸி J4 பிளஸ் மாடல் பிளாக், கோல்டு மற்றும் பின்க் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை விரைவில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo