CES 2019 விழாவில் சாம்சங்கின் 5G ஸ்மார்ட்போன் கண் கட்சிக்கு வைத்துள்ளது
ம்சங் நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் மாடலை காட்சிக்கு வைத்திருக்கிறது. கண்ணாடி பெட்டியினுள் வயர்லெஸ் சார்ஜர் / டாக் மீது இந்த ஸ்மார்ட்போன் வைக்கப்பட்டிருக்கிறது.
CES 2019 ஆண்டு விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறுகிறது இவ்விழாவில் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் புதுவித சாதனங்கள் மற்றும் கான்செப்ட்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் மாடலை காட்சிக்கு வைத்திருக்கிறது. கண்ணாடி பெட்டியினுள் வயர்லெஸ் சார்ஜர் / டாக் மீது இந்த ஸ்மார்ட்போன் வைக்கப்பட்டிருக்கிறது.
ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனின் பவர் பட்டன், வால்யூம் ராக்கர் மற்றும் பிக்ஸ்பி பட்டன் உள்ளிட்டவை தெளிவாக தேய்கிறது. இருப்பினும், ஸ்மார்ட்போன் பற்றிய மற்ற விவரங்கள் காணப்படவில்லை. அந்த வகையில் காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் 5ஜி தொழில்நுட்பத்தின் பலன்களை செயல்படுத்தக் காட்ட பயன்படுத்தப்பட்டிருக்கலாம்,
முன்னதாக வெளியான தகவல்களில் பிப்ரவரி மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஒரு மாடலில் மட்டும் 5ஜி வசதி வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
5ஜி தொழில்நுட்பத்தின் பயன்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லை. சமீபத்தில் சாம்சங் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியை அறிவித்தது. அந்த வகையில் புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன் பிப்ரவரி 20 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile