Huawei போனை காப்பி அடிக்கும் Samsung மூன்று முறை போல்ட் செய்யும் போனை தயார் செய்கிறது

Updated on 24-Oct-2024

கடந்த மாதம் Huawei சீனாவில் மூன்று முறை மடக்கும் போல்டபில் போனை அறிமுகம் செய்தது, Huawei Mate XT தோற்றத்தில் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், அதன் விலை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது சீனாவில் இதன் விலை CNY 19,999யில் அறிமுகம் செய்யப்பட்டது அதாவது இந்திய மதிப்பின் படி பார்த்தால் இதன் விலை சுமார் 2,37,000ரூபாயாக இருக்கும்

மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தாலும், 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த மூன்று மடங்கு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை முன்கூட்டிய ஆர்டர் செய்துள்ளனர். இப்போது, ​​Huawei தனது ட்ரை-ஃபோல்ட் தொழில்நுட்பத்தை உலகுக்குக் காட்டிய பிறகு, பிரபல பிராண்ட் சாம்சங் தனது சொந்த டிரிபிள் ஃபோல்ட் போனில் வேலை செய்வதாகக் கூறப்படுகிறது.

Samsung அதன் மூன்று மடிப்பு போன் எப்பொழுது கொண்டு வரும்?

ZDNet Korea யின் அறிக்கையின் படி சாம்சங் எலெக்ட்ரோனிக்ஸ் ஒரு ட்ரை போல்ட் மாடலை அது உருவக்கிகிறது, அதாவது இதன் ஸ்க்ரீனை இரண்டு முறை மடிக்க முடியும். இதனுடன், இந்த புதிய ஸ்மார்ட்போன் 2025 யில் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, அடுத்த ஆண்டு இந்த மூன்று முறை மடிக்கக்கூடிய போன் அறிமுகப்படுத்தப்படும் நுழைவு நிலை கிளாம்ஷெல் போல்டபில் ஸ்மார்ட்போனில் சாம்சங் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், இதற்கு முன்பே, சாம்சங் மூன்று முறை மடக்ககூடிய ஸ்மார்ட்போனில் வேலை செய்கிறது என்று லீக்கள் வெளிவந்தன. மார்ச் 2023 யில் , சாம்சங் கேலக்ஸி S23 FE அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக மூன்று மடிப்பு டிஸ்ப்ளே உடன் கூடிய போனை அறிமுகப்படுத்தும் என்று ஒரு டிப்ஸ்டர் பரிந்துரைத்தார்.

இதை தவிர சாம்சங் இதற்க்கு முன்பே வெவ்வேறு போலடபில் டிசைனுடன் இரண்டு ப்ரோடோடைப் போனை காமித்தது அது Flex G மற்றும் Flex S இருக்கிறது இதுவரை சந்தையில் வரவில்லை, ஆனால் Huawei का Mate XT Ultimate மற்றும் Tecno யின் Phantom Ultimate 2 உடன் ஒத்துபோகும்.டெக்னோவின் இந்த சாதனம் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ட்ரை-ஃபோல்ட் கான்செப்ட் போன் ஆகும்.

Huawei Mate XT யில் என்ன சிறப்பு இருக்கிறது?

இப்பொழுது Huawei Mate XTபற்றி பேசினால், இதில் மூன்று முறை போல்ட் செய்யகூடிய இந்த போனை பற்றி பல நமியை பற்றி பார்க்கலாம், இந்த போனில் இரண்டு கீல்கள் உள்ளன, அவை பாதியாக மடிக்கப்படும்போது Z-டிசைனை உருவாக்குகின்றன, இது மூன்று வெவ்வேறு திரைகளை வெளிப்படுத்துகிறது. ஃபோன் மடிந்திருக்கும் போது, ​​அதன் வெளிப்புறத் ஸ்க்ரீன் ஒரு சிறிய காட்சியாக செயல்படுகிறது, ஆனால் சாதனத்தை முழுவதுமாக பெரிய டேப்லெட் போன்ற ஸ்க்ரீனில் திறக்க முடியும்.

HUAWEI Mate XT with triple fold screen launched in China

கண்டெண்டை பார்ப்பதற்கும், மல்ட்டிடாச்கிங் செய்வதற்கும், கேமிங்கிற்கும் கூட வடிவமைப்பு சிறந்தது. இந்தத் ஸ்க்ரீனில் ஒன்றை கீபோர்ட் பயன்படுத்தலாம். அதன் ட்ரை-ஃபோல்ட் அமைப்பு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது, பயனர்கள் வெவ்வேறு பணிகளுக்கு காட்சி அளவை சரிசெய்ய அனுமதிக்கிறது, வீடியோ அழைப்புகள், வேலை அல்லது பெரிய திரையை வெறுமனே அனுபவிக்க இது சரியானதாக ஆக்குகிறது.

இதையும் படிங்க:Snapdragon 8 Elite புதிய சிப்செட் இந்த அனைத்து போனில் இருக்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :