சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி M04 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இது குறித்து 91மொபைல்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சாம்சங் புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை விரைவில் நடத்தும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதோடு புது ஸ்மார்ட்போனின் விளம்பரத்திற்கு சாம்சங் பயன்படுத்த இருக்கும் விளம்பர படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
முன்னதாக கேலக்ஸி M04 ஸ்மார்ட்போன் ப்ளூடூத் SIG, BIS, கீக்பென்ச் என ஏராளமான சான்றிதழ்களை பெற்று இருந்தது. சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் விரங்கள் கூகுள் பிளே கன்சோல் லிஸ்டிங்கில் இடம்பெற்று இருந்தது. அந்த வகையில், புதிய கேலக்ஸி M04 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றே தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த கேலக்ஸி 03 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி M04 மாடலில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G35 பிராசஸர், 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 5MP செல்ஃபி கேமரா,
தற்போது சர்வதேச சந்தையில் கிடைக்கும் கேலக்ஸி A04 ஸ்மார்ட்போனின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனாக இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. எனினும், தற்போதைய விளம்பர படத்தின் மூலம் இது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் ரக நாட்ச், டூயல் கேமரா சென்சார், மிண்ட் கிரீன் நிற ஆப்ஷனில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
புது ஸ்மார்ட்போனின் மற்றொரு விளம்பர படத்தில் கேலக்ஸி M04 விலை ரூ. 8 ஆயிரத்து 999-க்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி நிறுவனத்தின் C சீரிஸ் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கலாம்