சாம்சங் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட இயர்போன்களை தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது, மிகவும் மலிவு விலையில் இந்த ஏஎன்சி தொழில்நுட்பம் கொண்ட இந்த இயர்போன்கள் இந்தியாவில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது.
சாம்சங் இப்போது அறிமுகம் செய்த லெவல் இன்-இயர் (EO-IG930) இயர்போன்கள் பொறுத்தவரை ஆக்டிவ் நாய்ஸ் கான்செலேஷன் தொழில்நுட்ப வசதி கொண்டுள்ளது, சிறந்த சத்தம் கொடுக்கு திறமைக் கொண்டுள்ளது இந்த இயர்போன்கள்..
லெவல் ANC இயர்போன்கள் பொறுத்தவரை அனைத்து விற்பனை மையங்களிலும் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன் பிறகு பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளது இந்த லெவல் ANC இயர்போன்கள்.
இந்த லெவல் ANC இயர்போன்கள் பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் ஒலியின் தரத்தை குறைக்காமல் வெளிப்புற சத்தத்தை கேட்க முடியும்.
புதிய இயர்போன் பட்டன் கொண்ட இன்-லைன் ரிமோட் வழங்கப்பட்டிருப்பதால் அழைப்புகளை ஏற்கவும், ஒலியை கட்டுப்படுத்தவும் முடியும். மேலும் இவை வெளிப்புற சத்தத்தை 20 dB அளவு குறைக்கும் திறனைக் கொண்டுள்ளது.
புதிய லெவல் ஏஎன்சி இயர்போன் மாடல் பொறுத்தவரை 10மணி நேரம் தொடர்ந்து இயங்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் ஹைப்ரிட் கேனால் இயர்டிப்ஸ் டிசைன் இடம்பெற்றுள்ளது.
இந்த சாம்சங் லெவல் ANC இயர்போன் விலைப் பொறுத்தவரை ரூபாய்.3,799-ஆக உள்ளது.