சாம்சங் நிறுவனம் அதன் Galaxy A60 மற்றும் Galaxy A40S என இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்..!

சாம்சங்  நிறுவனம் அதன் Galaxy A60 மற்றும் Galaxy A40S  என இரு  ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்..!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி A60 மற்றும்  Galaxy A40S  என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை சீனா மற்றும் சாம்சங்கில் அறிமுகம் செய்துள்ளது.

செல்ஃபி எடுக்க 16 எம்.பி. கேமரா, கிரேடியன்ட் பேக், பின்புறம் கைரேகை சென்சார், ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 3500 Mah பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் 6.3 இன்ச் ஃபுல் HD. பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. புகைப்படம் எடுக்க 32 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A60 சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் HD . பிளஸ் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
– 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
– அட்ரினோ 612 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 32 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
– 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
– 8 எம்.பி. 123° அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா, f/2.2
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– யு.எஸ்.பி. டைப்-சி, டால்பி அட்மோஸ்
– டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3500 MAH . பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங

சாம்சங் கேலக்ஸி A40S சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 1560×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர்
– மாலி-G71 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
– டூயல் சிம்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
– 5 எம்.பி. 123° அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத்
– 5000 Mah. பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங்

கேலக்ஸி A40S  ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது கேமரா, 5 எம்.பி. 123° அல்ட்ரா வைடு லென்ஸ், பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார், 5000 Mah . பேட்டரி வழங்கப்படுகிறது.

விலை மற்றும் அறிமுக சலுகை 
சாம்சங் கேலக்ஸி A60 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.20,685) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி ஏ40எஸ் ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.15,510) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.வோடபோன்  வழங்கும்  இந்த புதிய சலுகையில் 12ஜிபி டேட்டா வழங்குகிறது, என்ஜோய்  மக்களே 

வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.999 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் இச்சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS  உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

இருப்பினும்  இந்த சலுகையில் பயனர்களுக்கு 12 ஜி.பி. டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. இதே போன்று நீண்ட நாள் வேலிடிட்டி கொண்ட மற்ற சலுகைகளில் தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படும் நிலையில், வோடபோன் புதிய சலுகையில் மொத்தமே 12 ஜி.பி. டேட்டா அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வோடபோன் சலுகை ஏர்டெல் வழங்கி வரும் ரூ.998 சலுகைக்கு போட்டியாக அமைகிறது. இத்துடன் புதிய வோடபோன் சலுகை முதற்கட்டமாக பஞ்சாப் வட்டாரத்தில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இச்சலுகை மற்ற வட்டாரங்களிலும் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

அதிகளவு டேட்டா விரும்புவோர் வோடபோன் வழங்கும் ரூ.1,699 சலுகையை தேர்வு செய்யலாம். ரூ.1,699 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜி.பி. டேட்டா, தினமும் 100 SMS  உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.998 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 12 ஜி.பி. டேட்டா, ஏர்டெல் டி.வி. சந்தா உள்ளிட்டவை 336 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo