அசத்தல் அம்சங்களுடன் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

அசத்தல்  அம்சங்களுடன் சாம்சங் ஸ்மார்ட்போன்  அறிமுகம்
HIGHLIGHTS

சாம்சங் 2018 OLED நிகழ்வில், அந்நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டது. இவை பெரும்பாலும் OLED சார்ந்த தொழில்நுட்பங்களாகவே இருந்தன.

சாம்சங் 2018 OLED நிகழ்வில், அந்நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டது. இவை பெரும்பாலும் OLED சார்ந்த தொழில்நுட்பங்களாகவே இருந்தன. 

சாம்சங் அறிவிப்புகளில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார், இன்-ஸ்கிரீன் கேமரா சென்சார் தொழில்நுட்பம், டச்-சென்சிட்டிவ் தொழில்நுட்பம் மற்றும் ஸ்கிரீன் சவுன்ட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. புதிய தொழில்நுட்பங்களை வழங்குவதற்கான பணிகளில் சாம்சங் ஈடுபட்டுள்ள நிலையில், இவை வரும் காலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படலாம் என தெரிகிறது.

புதிய தொழில்நுட்பம் முன்பக்க கேமராவினை டிஸ்ப்ளேவின் கீழ் மறைக்கும். மேலும் இந்த தொழில்நுட்பம் ப்ரோடோடைப்களில் முழுவீச்சில் சோதனை செய்யப்படுவதாகவும், இவை 2020-ம் ஆண்டு வாக்கில் பரவலாக வழங்கப்படலாம் என சாம்சங் அறிவித்துள்ளது.

கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தொழில்நுட்பத்திற்கான சோதனைகள் துவக்க நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. 

இன்-டிஸ்ப்ளே கேமரா மட்டுமின்றி, சாம்சங் நிறுவனம் புதிதாக கேமிங் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மாபர்ட்போனின் திரையில் ஹேப்டிக் ஆன்-டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தில் கேம் பட்டன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகவில்லை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo