பிப்ரவரி 20 இந்த சாம்சங் கேலக்சி S10 அறிமுகமாகும் என தேதி அறிவிக்கப்பட்டுள்ளது…!

Updated on 11-Jan-2019
HIGHLIGHTS

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி 10வது ஆண்டு அன்பேக்டு 2019 விழாவில் பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.

சிறப்பு செய்தி :

  • மடிக்கக்கூடிய  போல்டப்பில்  ஸ்மார்ட்போன்  அறிமுகம்
  • 10 வது ஆண்டு விழாவில் சாம்சங் வெளியீடு
  • Galaxy S10 சீரிஸ் அறிமுகமாகிறது

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி  10வது ஆண்டு அன்பேக்டு 2019 விழாவில் பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. இவ்விழாவில் அந்நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் மற்ற நிறுவனங்கள் தங்களின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை  அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், சாம்சங் முன்னதாக தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பிப்ரவரி 25 ஆம் தேதி பார்சிலோனாவில் துவங்குகிறது. 

The Wall Street Journal யின் அறிக்கையின் படி  சாம்சங் கேலக்சி  மடிக்கக்கூடிய போன் அறிமுகம் செய்யும் என வெளிவந்தது, அதாவது  இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் டிசம்பர் 2018 ஆண்டு  நிறுவனம்  வெளியிட்ட டீசரின்  மூலம் இந்த சாதனத்தில் OLED  பொலிடிங், அதாவது நீங்கள் அந்த ஸ்மார்ட்போனை  மடித்து கொள்ளும் வகையில் இருக்கும்  என வெளியிடப்பட்டு இருந்தது. இந்த  கேலக்சி Galaxy S10  மிகவும் நன்றாக  விற்பனை செய்யப்படலாம்  என கூறப்பட்டுள்ளது 

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 சீரிசில் 5.8 இன்ச், 6.1 இன்ச் மற்றும் 6.4 இன்ச் என மூன்று வித அளவுகளில் அறிமுகம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இன்ஃபினிட்டி ஓ ரக ஸ்கிரீன் வழங்கப்படும் என்றும், குவால்காம் நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே பிங்கரப்ரின்ட் சென்சார் எஸ்10 சீரிஸ் டாப் என்ட் மாடல்களில் வழங்கப்படுகிறது.

இதில் கேலக்ஸி எஸ்10இ (லைட்) ஸ்மார்ட்போனில் மட்டும் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படாது என கூறப்படுகிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களில் எக்சைனோஸ் 9820 8 என்.எம். பிராசஸர், டிரை-கிளஸ்டர் சி.பி.யு., இன்டகிரேட் செய்யப்பட்ட என்.பி.யு. வழங்கப்படுகிறது. 

இதனுடன் இந்த சாம்சங் மடிக்கக்கூடிய  டிவி MWC யில் அறிமுகப்படுத்தலாம், இதனுடன் Galaxy S10 5G வெர்சனில்  இந்த வருடம் பார்க்கலாம் என  என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக, இது வரவிருக்கும் மாதங்களில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது .

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :