கேலக்சி நோட் 9 உடன் நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் Gear S4 ஸ்மார்ட்வாட்ச்
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் ஆகஸ்டு 9-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் ஆகஸ்டு 9-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன் தென் கொரியாவில் இருந்து வரும் தகவல்களில் முன்னதாக கிசுகிசுக்கப்பட்ட தேதியிலேயே கேலக்ஸி நோட் 9 அறிமுகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இத்துடன் புதிய நோட் ஸ்மார்ட்போனுடன் அந்நிறுவனம் கியர் எஸ்4 ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தையும் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
முந்தைய மாடல் போன்று இல்லாமல் புதிய கியர் எஸ்4 சாதனத்தில் பேனல் லெவல் பேக்கேஜிங் வழங்கப்படுகிறது. இது முந்தைய சாதனத்தை விட மெல்லியதாகவும், விலை குறைவானதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. ஆகஸ்டு 9-இல் அறிமுகமாகும் பட்சத்தில் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை விட நோட் 9 இரு வாரங்கள் முன்னதாக வெளியாகும்.
இத்துடன் வெளியீட்டு தேதியை குறிப்பிடாமல் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 9 மாடலுடன் கியர் எஸ்4 சாதனத்தை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் PLP வழிமுறை சார்ந்த சிப்செட் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்வாட்ச் விலை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியீட்டு தேதி மட்டும் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், கியர் எஸ்4 சாதனத்தின் சிறப்பம்சங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஏற்கனவே வெளியான தகவல்களில் 2018 கியர் எஸ் ஸ்மார்ட்வாட்ச் அதிகளவு பேட்டரி திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile