Samsung Galaxy Z Flip 6 ஸ்பெசல் Doraemon எடிசன் அறிமுகம் பாக்கவே சூப்பர் லுக்கில் இருக்கிறது
நிறுவனம் ஹாங்காங்கில் இந்த போன் டோரேமான் எடிசன் அறிமுகப்படுத்தியுள்ளது
100% DORAEMON & FRIENDS கண்காட்சியைக் கொண்டாடும் வகையில் நிறுவனம் இந்த லிமிடெட் எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது
Doraemon Galaxy Z Flip 6 Limited edition ப்ரீ ஆர்டர் செய்து கொ;ள்ளலாம்
Samsung அதன் சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிலிப் போன் ஆன Galaxy Z Flip 6 யின் லிமிடெட் எடிசன் அறிமுகம் செய்தது நிறுவனம் ஹாங்காங்கில் இந்த போன் டோரேமான் எடிசன் அறிமுகப்படுத்தியுள்ளது. காரணம், 100% DORAEMON & FRIENDS கண்காட்சியைக் கொண்டாடும் வகையில் நிறுவனம் இந்த லிமிடெட் எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. எடிசனில் 800 போன்கள் மட்டுமே வெளியிடப்படும். அதனால் டோரேமனின் ரசிகர்களும் இந்தக் போனை தங்கள் சேகரிப்பாகப் போற்றலாம். பிரபலமான அனிம் சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போன் சிறப்ப்ம்சங்களின் அடிப்படையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.
Doraemon Samsung Galaxy Z Flip 6 ப்ரீ ஆர்டர் மற்றும் விலை தகவல்.
இதன் விலை பற்றி பேசினால் doraemon Galaxy Z Flip 6 Limited edition ப்ரீ ஆர்டர் செய்து கொ;ள்ளலாம் இந்த போனின் விலை HKD 10,698 (குறைந்தபட்சம் 1,14,400ரூபாய்) இருக்கும்
Samsung Galaxy Z Flip 6 Doraemon edition சிறப்பு அம்சம்
டிசைன்
Galaxy Z Flip 6 Doraemon edition யின் கலர் லைட் ப்ளூ ஆக இருக்கிறது இது கிட்டத்தட்ட டோரேமான் அனிம் கதாபாத்திரத்தின் நிறம் போல் தெரிகிறது. சிறப்பு Doraemon தீம் ஏற்கனவே போனில் ஏற்றப்பட்டுள்ளது. இந்த தீம் தனித்துவமான லோக் அனிமேஷன்கள், லோக் ஸ்க்ரீன் ஹோம் ஸ்க்ரீன் மற்றும் கஸ்டமைஸ் ஆப் ஐகான்களுடன் வருகிறது. இது தவிர, ஒரு டோரேமான் தீம் ஃபோன் ஸ்டாண்டும் காந்த டிசைனை கொண்ட போனுடன் வருகிறது, மேலும் இது போனை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. நிறுவனத்தின் ஹாங்காங் வெப்சைட்டில் இந்த போன் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது
டிஸ்ப்ளே
Samsung Galaxy Z Flip 6 யின் இந்த ஸ்பெசல் எடிசன் அதே சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. ஃபோன் One UI 6.1.1 யில் இயங்குகிறது. இது இரட்டை சிம் கனேக்டிவிட்டியுடன் வருகிறது. இந்த போனில் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது. Galaxy Z Flip 6 யின் கவர் ஸ்கிரீன் 3.4-இன்ச் (720×748 பிக்சல்கள்) சூப்பர் AMOLED ஸ்க்ரீனனது 60Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 306ppi பிக்சல் டென்சிட்டி கொண்டது. உட்புறத்தில், இது 6.7-இன்ச் முழு-HD+ (1,080×2,640 பிக்சல்கள்) டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளே 1Hz மற்றும் 120Hz இடையே ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது.
கேமரா
வெளிப்புறத்தில், Galaxy Z Flip 6 ஆனது இரட்டை பிக்சல் ஆட்டோஃபோகஸ், OIS மற்றும் f/1.8 துளையுடன் கூடிய 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா மற்றும் f/2.2 துளை கொண்ட 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவுடன் பொருத்தப்பட்டுள்ளது. இன்டர்னல் டிஸ்ப்ளேவில், கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 ஆனது 10 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை f/2.2 அபர்ச்சருடன் கொண்டுள்ளது.
பேட்டரி
Galaxy Z Flip 6 ஆனது 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் உள்ளது மற்றும் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்டிர்க்கான IP48 ரேட்டிங்கை கொண்டுள்ளது. நிறுவனத்தின் படி, அதன் அளவீடு மடிக்கும்போது 85.1×71.9×14.9 mm திறக்கும் போது 165.1×71.9×6.9 mm மற்றும் அதன் எடை 187 கிராம் ஆகும்.
இதையும் படிங்க: iQOO Z9 Lite 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile