Samsung Galaxy S9 டீசரில் வெளியான முக்கிய தகவல்கள்

Updated on 15-Feb-2018
HIGHLIGHTS

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் Galaxy S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் டீசர் வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் Samsung Galaxy S9 மற்றும் S9 plus ஸ்மார்ட்போன்களின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், புதிய ஸ்மார்ட்போன்களுக்கான டீசர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

சாம்சங் வெளியிட்டிருக்கும் புதிய டீசரில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் குறைந்த வெளிச்சத்திலும் தலைசிறந்த புகைப்படங்களை எடுக்கும் வசதி, 3D எமோஜி அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரியவந்திருக்கிறது. ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் முழுமையாய் வெளியாகவில்லை என்றாலும், இதில் எதிர்பார்க்கக்கூடிய அம்சங்கள் சார்ந்த விவரம் இடம்பெற்றிருக்கிறது. 

முதல் டீசரில் புதிய ஸ்மார்ட்போனின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டு, புதிய ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முந்தைய ஸ்மார்ட்போனினை விட புதிய எஸ்9 அதிவேகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இத்துடன் ஸ்லோ-மோ அம்சங்களும் புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ்-இல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது டீசரின்படி புதிய ஸ்மார்ட்போனில் லோ-லைட் கேமரா (குறைந்த வெளிச்சத்திலும் தலைசிறந்த புகைப்படங்களை வழங்கும்) அம்சம் வழங்கப்பட்டு இருப்பதை தெரியப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனின் கேமராவில் பெரிய அப்டேட் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மூன்றாவது வீடியோவில் புதிய எஸ்9 சீரிஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கும் என்றும், வீடியோ நிறைவுறும் போது 3D எமோஜி வந்து செல்வது எஸ்9 அம்சங்களில் 3D எமோஜியும் ஒன்றாக இருப்பதை தெரியப்படுத்தியுள்ளது. சாம்சங் இந்தியா நிறுவன தலைவர் கார்லோ பார்லோகோ தனது ட்விட்டரில் சிறிய வீடியோவை பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

இவர் பதிவிட்டு இருக்கும் வீடியோவில் கேமரா அம்சங்களில் பெரிய அப்டேட், 3D எமோஜி உள்ளிட்டவை கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்களின் மிகமுக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கலாம் என்பது தெரியவந்திருக்கிறது. புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ் குறித்து முன்னதாக வெளியாகி இருக்கும் தகவல்களில் ஸ்மார்ட்போனின் பெரும்பாலான சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. 

எனினும் புதிய கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்த முழு விவரங்கள் பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் தெரியவரும். 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :