கண்கவரும் நிறங்களில் கேலக்ஸி S9 சீரிஸ்

கண்கவரும் நிறங்களில் கேலக்ஸி S9 சீரிஸ்
HIGHLIGHTS

சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களில் சேட்டின் கிளாஸ் ஃபினிஷ் செய்யப்பட்ட முதல் ஸ்மார்ட்போனாக கேல்க்ஸி எஸ்9 சன்ரோஸ் கோல்டு நிறம் அமைந்திருக்கிறது. இதுபோன்ற ஃபினிஷ் ஸ்மார்ட்போனினை மிளிர செய்கிறது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சன்ரைஸ் கோல்டு மற்றும் பர்கன்டி ரெட் என இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கேல்க்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்கள் மிட்நைட் பிளாக், டைட்டானியம் கிரே, கோரல் புளு, லிலாக் பர்ப்பிள் போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 

சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களில் சேட்டின் கிளாஸ் ஃபினிஷ் செய்யப்பட்ட முதல் ஸ்மார்ட்போனாக கேல்க்ஸி எஸ்9 சன்ரோஸ் கோல்டு நிறம் அமைந்திருக்கிறது. இதுபோன்ற ஃபினிஷ் ஸ்மார்ட்போனினை மிளிர செய்கிறது. 

கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் பர்கன்டி நிற மாடல்கள் முதற்கட்டமாக கொரியா மற்றும் சீனாவில் மே மாதம் முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சன்ரைஸ் கோல்டு நிற கேல்கி எஸ்9 சீரிஸ் ஜூன் மாத வாக்கில் ஆஸ்திரேலியா, சிலி, ஜெர்மனி, ஹாங் காங், கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, ஸ்பெயின், தாய்வான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் கிடைக்கும் என்றும் மற்ற நாடுகளில் வரும் மாதங்களில் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நிறம் தவிர ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் புதிய நிறம் கொண்ட எஸ்9 ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவும், கேல்கஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 / எக்சைனோஸ் 9810 சிபெசெட், 4 ஜிபி, 6 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் பிக்சல் PDAF, கேல்கஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார், வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo