சாம்சங் SM-G8750 மாடல் கொண்ட் ஸ்மார்ட்போன் பென்ச்மார்க் வலைத்தளங்களில் கடந்த மாதம் வெளியாகி அசன் சிறப்பம்சங்களும் தெரியவந்தது.
அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 4 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மினி என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் TENAA வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. இதில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் FHD பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே,16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, கிளாஸ் பேக் மற்றும் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் பிரத்யேக பிக்ஸ்பி பட்டன் வழங்கப்படுகிறது.
சாம்சங் கேல்கஸி எஸ்8 லைட் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
– 5.8 இன்ச் ஃபுல் ஹெச்டி 2220×1080 பிக்சல் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
– அட்ரினோ 512 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி செல்ஃபி கேமரா, வைடு ஆங்கிள் லென்ஸ்
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி 3.1
– 3000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி எஸ்8 லைட் (SM-G8750) ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் கிடைக்கும் என்றும் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.