சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை மிட்நைட் பிளாக் மற்றும் மேப்பிள் கோல்டு நிறங்களில் வெளியிட்டது. பின் இந்த ஸ்மார்ட்போன்களின் ஆர்சிட் கிரே நிற ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
அந்த வகையில் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனின் பர்கன்டி ரெட் நிற வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சாம்சங் நிறுவன கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டன.
சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.49,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் பேடிஎம் மூலம் வாங்குவோருக்கு ரூ.10,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. புதிய பர்கன்டி ரெட் நிற ஸ்மார்ட்போன் லிமிட்டெட் எடிஷன் என்பதால் குறைந்த அளவு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யப்படுகின்றன.
Samsung Galaxy S 8 சிறப்பம்சங்கள்:
– 5.8 இன்ச் QHD+1440×2960 ரெசல்யூஷன் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– 12 MB டூயல் பிக்சல் பிரைமரி கேமரா
– 8 MB செல்ஃபி கேமரா
– எக்சைனோஸ் 8895 குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
– 4 GB ரேம்
– 64 GB இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– ஐரிஸ் ஸ்கேனர், டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதி
– ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் வசதி
– 3000 mah பேட்டரி
சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ் பர்கன்டி ரெட் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் விற்பனை ஏப்ரல் 13-ம் தேதி துவங்குகிறது. கேலக்ஸி எஸ் 8 பிளஸ் 64ஜிபி மாடலின் விலை ரூ.53,990 என்றும் 128 ஜிபி மாடலின் விலை ரூ.64,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.