Samsung யின் இந்த போனில் வேற லெவல் ஆபர் ரூ,25,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட்

Updated on 18-Mar-2025

நீங்கள் சாம்சங்கின் புதிய Samsung Galaxy S25 Ultra,போனை வாங்க விரும்பினால் இது சரியான நேரமாக இருக்கும் அதாவது இந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போனில் அதிரடியாக ரூ,25,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது மேலும் அமேசானில் மிக சிறந்த பேங்க் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இது சாம்சங்கின் இதுவரை இல்லாத அளவுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் ஆகும்.

நீங்கள் Galaxy S25 Ultra-வை அதன் மேம்பட்ட அம்சங்களுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் சரி அல்லது சமீபத்திய Samsung அனுபவத்தை விரும்பினாலும் சரி, இந்த சலுகையை புறக்கணிப்பது கடினமாக இருக்கலாம். இந்த ஆபர் நன்மை எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy S25 Ultra டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் தகவல்

Samsung Galaxy S25 Ultra இந்தியாவில் ரூ.1,29,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, ​​Amazon யில் , இந்த பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ரூ.1,05,400க்கு பட்டியலிடப்பட்டுள்ளது, இது உண்மையான விலையை விட ரூ.24,599 குறைவு. கூடுதலாக, Axis Bank/PNB Bank கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் ரூ.1,000 தள்ளுபடியைப் பெறலாம். இன்னும் அதிகமாக சேமிக்க, உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றலாம்.

Samsung Galaxy S25 Ultra சிறப்பம்சம்

Samsung Galaxy S25 Ultra போனின் சிறப்பம்சம் பற்றி பேசினால், இதில் 6.9-inch QHD+ Dynamic AMOLED 2X டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் மிகவும் பவர்புல்லான Qualcomm’s Snapdragon 8 Elite ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 12GB RAM மற்றும் 1TB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

இதன் கேமராவை பற்றி பேசுகையில் , Galaxy S25 Ultra-வில் 200MP ப்ரைமரி கேமரா, 50MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை உள்ளன. இதில் 10MP 3x டெலிஃபோட்டோ ஷூட்டரும் உள்ளது. முன்பக்கத்தில், 12MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது. கடைசியாக, S25 Ultra 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:iPhone யின் இந்த போனில் ரூ,15,500 வரை டிஸ்கவுண்ட் இதை எப்படி பெறுவது பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :