Samsung Galaxy S24 சீரிஸ் அறிமுகம் இதன் இந்திய விலை மற்றும் சிறப்பம்சம் தெருஞ்சிகொங்க

Samsung Galaxy S24 சீரிஸ் அறிமுகம் இதன் இந்திய விலை மற்றும் சிறப்பம்சம் தெருஞ்சிகொங்க
HIGHLIGHTS

Samsung Galaxy S24, Galaxy S24+ மற்றும் Galaxy S24 Ultra நிறுவனம் Galaxy Unpacked நிகழ்வில் ஜனவரி 17 அன்று அறிமுகம் செய்யப்பட்டது

இந்த ஸ்மார்ட்ஃபோன்கள் கேலக்ஸி AI டேக்குடன் அறிமுகம் செய்யப்பட்டது

இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம்.

Samsung Galaxy S24, Galaxy S24+ மற்றும் Galaxy S24 Ultra நிறுவனம் Galaxy Unpacked நிகழ்வில் ஜனவரி 17 அன்று அறிமுகம் செய்யப்பட்டது, சீரிஸ் தொடர்பான பல லீக்கள் வெளிப்பட்டதைப் போன்ற அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட்ஃபோன்கள் கேலக்ஸி AI டேக்குடன் அறிமுகம் செய்யப்பட்டது, இதில் இன்பில்ட் ஸ்மார்ட் AI அம்சத்தை பார்க்கலாம். இதில் Live Translate, Note Assist, மற்றும் Circle to Search போன்ற அம்சங்களின் பெயரும் இதில் அடங்கும் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம்.

Samsung Galaxy S24.யின் இந்திய விலை

Samsung Galaxy S24 ஸ்மார்ட்போன் அம்பர் எல்லோ,கோபால்ட் வைலெட், மற்றும் ஒனிக்சி ப்ளாக் கலர் வேரியண்டில் அறிமுகமானது, 8GB RAM/256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 79,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது, அதுவே 8GB RAM/512GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை RS 89,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது

Samsung Galaxy S24+ யின் விலை பற்றி பேசினால் இது 12GB + 256GB – 86,999 ரூபாய் மற்றும் இதன் 12GB + 512GB – 87,999 ரூபாயாகும் இந்த போன் கோபால்ட் வைலெட் மற்றும் ஒனிக்சி ப்ளாக் கலர் வகையில் கிடைக்கும்

Samsung Galaxy S24 Ultra விலை பற்றி பேசினால், 12GB + 256GB – 1,16,999 ரூபாய் அதுவே 12GB + 512GB – 1,17,999 ரூபாய் மற்றும் 12GB + 1TB – 159,999 ரூபாயாகும் இந்த போன் டைடானியம் கிரே, டைடானியம் வைலெட் மற்றும் டைடானியம் ப்ளாக் கலர் விருப்பங்களில் கிடைக்கும்.

Galaxy S24 series முன் பதிவு எப்படி செய்வது?

Samsung Galaxy S24 சீரிஸ் ப்ரீ ஆர்டர் சாம்சங்கின் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் ரீடைல் ஸ்டோரில் வாங்கலாம்., மேலும் வாடிக்கையாளர் Galaxy S24 சீரிஸ் ப்ரீ புக் செய்யும்போது ஜனவரி 18 லைவ் நிகழ்வில் கூடுதலாக 4,999. மதிப்புள்ள வயர்லெஸ் சார்ஜர் பெறலாம்.

Samsung Galaxy S24 Ultra சிறப்பம்சம்

Galaxy S4 Ultra போனில் Android 14 அடிபடையின் கீழ் One UI 6.1 யில் வேலை செய்கிறது. இந்த போனில் 6.8 இன்ச் எட்ஜ் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே உள்ளது. இது 1Hz–120Hz அடாப்டிவ் ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது. இந்த போனில் ஹை ப்ரைட்னாஸ் 2600 நிட்கள். இதன் டிஸ்ப்ளே விஷன் பூஸ்டர் அம்சத்தைக் கொண்டுள்ளது, இது போன் டிஸ்ப்லேவின் வெளியில் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது., மேலும் இதன் டிஸ்ப்ளேவில் Corning Gorilla Armor ப்ரோடேக்சன் கொடுக்கப்பட்டுள்ளது இந்த போனின் பிரேம் டைட்டனியத்தில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த போனில் Snapdragon 8 Gen 3 SoC இன் தனிப்பயன் பதிப்பு போனில் வழங்கப்பட்டுள்ளது. இது கேலக்ஸிக்கான ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 மொபைல் பிளாட்ஃபார்ம் என பெயரிடப்பட்டுள்ளது. 12 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

Galaxy S24 Ultra யில் குவட் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது, இதில் இதில் 200 மெகாபிக்சல் வைட் எங்கில் கேமரா f/1.8 லென்ஸ் மற்றும் 85 டிகிரி வருகிறது. இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) சப்போர்டை கொண்டுள்ளது. கேமரா செட்டிங்கில் உள்ள இரண்டாவது சென்சார் 12-மெகாபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸ் ஆகும், இது f/2.2 அப்ரட்ஜர் மற்றும் 120 டிகிரி பார்வைக் களத்தைக் கொண்டுள்ளது. அடுத்தது OIS சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர். போனில் f/3.4 அப்ரட்ஜர் மற்றும் 5X ஆப்டிகல் ஜூம் உள்ளது. இதில் நான்கவதாக 10 மேகபோக்சல் டெலிபோட்டோ சூட்டார் போனில் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் f/2.4 துளை மற்றும் 3X ஆப்டிகல் ஜூம் உள்ளது. இது OIS ஆதரவுடன் வழங்கப்படுகிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ காலிர்க்காக இது 12-மெகாபிக்சல் கேமராவை முன்பக்கத்தில் கொண்டுள்ளது, இது f/2.2 லென்ஸ் மற்றும் 80 டிகிரி feeld off view கொண்டுள்ளது.

Galaxy S24 Ultra போனில் கனேக்டிவிட்டிக்கு 5G, 4G LTE, Wi-Fi 7, Wi-Fi Direct, Bluetooth 5.3 மற்றும் USB Type-C போர்ட் வளங்கப்புகிறது இதை தவிர இதில் நிறுவனம் Pen stylus வழங்கப்படுகிறது, செக்யுரிட்டிக்கு Samsung Knox, Knox Vault மற்றும் Passkey உடன் இதில் ரெஜிஸ்டர் வெப்சைட் யின் அக்சஸ் வழங்கப்படுகிறது மேலும் இதில் டஸ்ட் வாட்டர் ரெஸ்டண்டிர்க்காக IP68 ரேட்டிங் இருக்கிறது. இந்த போனில் 5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, மேலும் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது., இது Fast Wireless Charging 2.0 உடன் வருகிறது, இதில் 15W பாஸ்ட் சார்ஜிங் ஸ்பீட் வழங்கப்படுகிறது

Samsung Galaxy S24, Galaxy S24+ யின் சிறப்பம்சம்.

Samsung Galaxy S24 மற்றும் Galaxy S24+ யின் SIM மற்றும் சாப்ட்வேர் அம்சம் Ultra மாடலை போலவே இருக்கிறது, Galaxy S24 ஆனது 6.2-inch FullHD Plus டிஸ்ப்ளே மற்றும் Galaxy S24+ ஆனது 6.7-inch டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இரண்டுமே டைனமிக் AMOLED 2X திரையை 120Hz மாறி ரெப்ராஸ் ரேட்டுடன் கொண்டுள்ளது. இவை பார்வை பூஸ்டர் சப்போர்டை கொண்டுள்ளது. இரண்டு போன்களிலும் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட் உள்ளது, இது அல்ட்ரா மாடலைப் போன்றது. இந்திய மாறுபாடு Exynos 2400 SoC உடன் வருகிறது. வழக்கமான மாடலில் 8 ஜிபி ரேம் உள்ளது, பிளஸ் மாடலில் 12 ஜிபி ரேம் உள்ளது.

கேமரா பற்றி பேசுகையில் Galaxy S24 மற்றும் Galaxy S24+ ஒரே போன்ற கேமரா தான் இருக்கிறது இதன் பின் புறத்தில் மூன்று கேமரா செட்டப் இருக்கிறது, முதல் கேமரா f/1.8 aperture லென்ஸுடன் கூடிய 50 மெகாபிக்சல் வைட் என்கில் கேமரா ஆகும். இது 85 டிகிரி பார்வை மற்றும் OIS சப்போர்டை கொண்டுள்ளது. இரண்டாவது லென்ஸ் என்பது 12-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஆங்கிள் கேமரா மற்றும் f/2.2 அபெர்ச்சர் லென்ஸ் மற்றும் 120 டிகிரி பார்வைக் களம் கொண்டது. மூன்றாவது கேமரா f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகும். இதில் 3X ஆப்டிகல் ஜூம் உள்ளது. ஃபோனில் 12-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது, இது f/2.2 அப்ரட்ஜர் மற்றும் 80 டிகிரி பார்வையைக் கொண்டுள்ளது.

போனில் 512 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் உள்ளது. கனேக்டிவிட்டிக்கு இது 5G, 4G LTE, Wi-Fi 6E, புளூடூத் 5.3, Wi-Fi Direct மற்றும் USB Type-C போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை தூசி மற்றும் நீர் செக்யுரிட்டிக்காக IP68 என ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது செக்யுரிட்டிகாக Samsung Knox, Passkey சப்போர்ட் உள்ளது.

Galaxy S24 ஆனது 4000mAh பேட்டரியையும், Galaxy S24+ ஆனது 4900mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. இவை முறையே 25W மற்றும் 45W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளன. இரண்டு மாடல்களும் அல்ட்ரா மாடலைப் போலவே IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளன.

Galaxy S24 சீரிச்ன் அறிமுகத்துடன், நிறுவனம் ஸ்மார்ட்போன்களுக்குள் AI தொழில்நுட்பத்தில் ஒரு படி முன்னேறியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் பல வகையான AI அம்சங்கள் உள்ளன. இவை லைவ் ட்ரேன்ச்லேசன் செயல்பாட்டைக் கொண்டிருக்கின்றன, இது ரியல் டைம் டூ வெ ட்ரேன்ச்லேட் இருக்கிறது . புதிய chat அசிச்டண்டனது ChatGPT போன்ற ஆன்லைன் சாட்போட் சப்போர்ட் வழங்குகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ தூள் உதவியுடன், செய்தியைச் சுருக்கமாகக் கூறலாம், மேலும் இந்தச் செய்திக்கு என்ன பதில் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் அந்தக் கருவி தெரிவிக்கும்.

இதையும் படிங்க: Amazon Sale 2024 கேமிங் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது அதிரடி தள்ளுபடி

Samsung யின் AI கீபோர்ட் பற்றி பேசினால் இது ரியல் டைமில் 13 மொழிகளில் மெசேஜ் ட்ரேன்ஸ்லேட் செய்ய முடியும், இதை தவிர இதில் Note Assist அம்சம் இருக்கிறது, இதன் மூலம் AI சுருக்கம் மற்றும் டெம்ப்ளேட் உருவாக்கம் செய்ய முடியும்.Transcript Assist உதவியால் ரெக்கார்டிங் ட்ரேன்ஸ்லேட் செய்ய முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo