சாம்சங்கின் இந்த கடந்த ஜெனரேசன் போனன Samsung Galaxy S24 5Gயில் அதிகபடியாக கஸ்டமர் 27,510ரூபாய் மிட்சப்படுத்தலாம் Galaxy S24 5G அமேசானில் பேங்க் ஆபர் நன்மையுடன் இந்த போனை ரூ,79,999 விற்பனை செய்யப்படுகிறது மேலும் இந்த போனின் அம்சம் மற்றும் ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
Samsung Galaxy S24 5G தற்போது Amazon இல் ரூ.79,999 லிருந்து ரூ.53,989க்குக் குறைந்துள்ளது. HDFC, BOB, Federal bank கார்டுகள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்ட்களை பயன்படுத்தினால் கஸ்டமர்கள் கூடுதலாக ரூ.1,500 பேங்க் தள்ளுபடியைப் பெறலாம், இதன் மூலம் விலை ரூ.52,500க்குக் கீழே குறைகிறது.
கஸ்டமர்கள் மாதத்திற்கு ரூ.2,617 இலிருந்து தொடங்கும் EMI விருப்பங்களைத் தேர்வுசெய்யலாம். நோ கோஸ்ட் EMI-க்கும் விருப்பங்கள் உள்ளன. உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்ய விரும்பினால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாற்றலாம் ஆனால் மாடல் மற்றும் நிலைமைகளின் அடிப்படையில் ரூ.22,800 வரை மதிப்பு பெறலாம்.
கூடுதல் அம்சங்களைப் பொறுத்தவரை, கஸ்டமர் Samsung Care+ Accidental & Liquid Damage Protection, மொபைல் Damage Protection, கூடுதல் மொபைல் உத்தரவாதம் மற்றும் பலவற்றிலிருந்து தேர்வு செய்யலாம்.
சாம்சங்கின் கேலக்ஸி S24 5G, 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 2,600 நிட்களின் ஹை ப்ரைட்னாஸ் கூடிய 6.2-இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Exynos 2400 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த மாதம் இந்த சாதனம் Android 15-அடிப்படையிலான One UI 7 அப்டேட்டை பெறும் என்று சாம்சங் உறுதிப்படுத்தியுள்ளது, இது புதிய கேலக்ஸி AI அம்சங்களைக் கொண்டுவருகிறது.
Galaxy S24 5G 4,000mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் 25W வயர்டு சார்ஜிங் மற்றும் ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 ஆகியவற்றை ஆதரிக்கிறது. இணைப்பு அம்சங்களில் Wi-Fi 6, ப்ளூடூத் 5.3, NFC மற்றும் USB 3.2 Gen 1 டைப்-C போர்ட் ஆகியவை அடங்கும். ஸ்மார்ட்போன் IP68-சான்றிதழ் பெற்றது, இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பை உறுதி செய்கிறது.
புகைப்படத்தைப் பொறுத்தவரை, Galaxy S24 5G ஆனது OIS மற்றும் 8K வீடியோ பதிவு ஆதரவுடன் கூடிய 50MP முதன்மை சென்சார், 12MP அல்ட்ரா-வைட் கேமரா, 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கான 12MP முன்பக்க கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: Infinix யின் இந்த போனில் முதல் விற்பனை பேங்க் ஆபருடன் வெறும் ரூ,7,999யில் வாங்க சூப்பர் வாய்ப்பு