சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S23 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஆண்டிற்கான முதல் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பிப்ரவரி 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புது ஸ்மார்ட்போன்களின் டீசரை சாம்சங் வெளியிட்டு வருகிறது.
புது ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை ஒட்டி இவற்றை வாங்க முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பிப்ரவரி 1 ஆம் தேதி நள்ளிரவு இந்திய நேரப்படி 11.30 மணிக்கு துவங்க இருக்கிறது.
தற்போது சாம்சங் வெளியிட்டு இருக்கும் புதிய யூடியூப் ஷாட்ஸ் வீடியோவில், புது கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல் ஸ்பேஸ் ஜூம் மற்றும் நைட் மோட் வசதிகளை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் சாம்சங் நிறுவனம் ஸ்பேஸ் ஜூம் அம்சத்தை வழங்க இருக்கிறது. இத்துடன் நைட் மோட் புகைப்படம் மற்றும் வீடியோ படமாக்கும் அனுபவத்தை சாம்சங் புது கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் வழங்குகிறது.
புதிய சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் 6.8 இன்ச் QHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி வழங்கப்படும் என தெரிகிறது.
புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா, 12MP இரண்டாவது கேமரா மற்றும் டெலிபோட்டோ சென்சார்கள் வழங்கப்படுகிறது. கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என்றும் அதிகபட்சம் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜஜிங் வசதி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது