Samsung Galaxy S23 Ultra கேமரா தகவல் லீக்.ஜூம் நைட் மோட் கேமரா கொண்டிருக்கும்.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S23 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த ஆண்டிற்கான முதல் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பிப்ரவரி 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S23 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஆண்டிற்கான முதல் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பிப்ரவரி 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புது ஸ்மார்ட்போன்களின் டீசரை சாம்சங் வெளியிட்டு வருகிறது.
புது ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை ஒட்டி இவற்றை வாங்க முன்பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பிப்ரவரி 1 ஆம் தேதி நள்ளிரவு இந்திய நேரப்படி 11.30 மணிக்கு துவங்க இருக்கிறது.
தற்போது சாம்சங் வெளியிட்டு இருக்கும் புதிய யூடியூப் ஷாட்ஸ் வீடியோவில், புது கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல் ஸ்பேஸ் ஜூம் மற்றும் நைட் மோட் வசதிகளை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் சாம்சங் நிறுவனம் ஸ்பேஸ் ஜூம் அம்சத்தை வழங்க இருக்கிறது. இத்துடன் நைட் மோட் புகைப்படம் மற்றும் வீடியோ படமாக்கும் அனுபவத்தை சாம்சங் புது கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் வழங்குகிறது.
புதிய சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் 6.8 இன்ச் QHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி வழங்கப்படும் என தெரிகிறது.
புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா, 12MP இரண்டாவது கேமரா மற்றும் டெலிபோட்டோ சென்சார்கள் வழங்கப்படுகிறது. கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என்றும் அதிகபட்சம் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜஜிங் வசதி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது
S23 Ultra camera sensor changes:
Front camera (40MP GH1→12MP 3LU),
Ultra Wide Angle (12MP IMX563→12MP IMX564),
Main camera (108MP HM3→200MP HP2)
The 3x and 10x telephoto sensors have not changed (IMX754→IMX754)
P 1 is S23 Ultra, P 2 is S22 Ultra
Thanks @edwards_uh pic.twitter.com/QuefuFlB0f— Ice universe (@UniverseIce) January 23, 2023
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile