Samsung யின் இந்த போனை பாதி விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு
இந்த ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில் Amazon.in யில் Samsung Galaxy S23 Ultra 5G யில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.நீங்கள் புதிய போன் வாங்க நினைத்தால், இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த காலகட்டத்தில், விலை குறைப்பு தவிர, பரிமாற்ற சலுகைகளும் பெரும் சேமிப்பிற்கு வழிவகுக்கும். Galaxy S23 Ultra 5G யின் கிடைக்கும் டீல்கள் மற்றும் டிஸ்கவுன்ட் ஆபர் பற்றி பார்க்கலாம் வாங்க.
Samsung Galaxy S23 Ultra 5G விலை மற்றும் ஆபர்
Samsung Galaxy S23 Ultra 5G யின் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் e-commerce தளத்தில் ரூ.72,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, அதேசமயம் இது கடந்த ஆண்டு சந்தையில் ரூ.1,24,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் உங்கள் பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனைக் கொடுப்பதன் மூலம் ரூ.53,200 சேமிக்கலாம். இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் அதிகபட்ச பலன், பரிமாற்றத்தில் வழங்கப்படும் போனின் தற்போதைய நிலை மற்றும் மாதிரியைப் பொறுத்தது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.52,000 குறைந்த விலையில் கிடைக்கிறது.
Samsung Galaxy S23 Ultra 5G சிறப்பம்சம்.
Samsung Galaxy 23 Ultra 5G ஆனது 6.8-இன்ச் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே கொண்டுள்ளது, அதன் ரெப்ராஸ் ரேட் 120Hz ஆகும். இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 8 Gen 2 SoC யில் வேலை செய்கிறது.
கேமரா செட்டப் பற்றி பேசுகையில், கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 5ஜியின் பின்புறம் 200 மெகாபிக்சல் பிரைமரி வைட் கேமரா, எஃப்/1.8 அப்ரட்ஜர், 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர், எஃப்/2.2 அபர்ச்சர் மற்றும் 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ எஃப்/2 ஷூட்டார் வழங்கப்படுகிறது. முன்புறத்தில், f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. வெறும் 20 நிமிடங்களில் 65 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. கனெக்சன் விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6e, Bluetooth 5.3 மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்காக, இந்த போன் IP68 ரேட்டிங்கில் வருகிறது.
இதையும் படிங்க:OnePlus யின் இந்த போனில் அதிரடியாக ரூ,40,000 டிஸ்கவுன்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile