Samsung Galaxy S23 series இந்தியாவில் முன் பதிவு ஆரம்பம், இந்த போன் எப்போ அறிமுபகமாகும்.

Samsung Galaxy S23 series இந்தியாவில் முன் பதிவு ஆரம்பம், இந்த போன் எப்போ அறிமுபகமாகும்.
HIGHLIGHTS

இந்த ஆண்டிற்கான முதல் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பிப்ரவரி 1 ஆம் தேதி சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெற இருக்கிறது

புது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1999 ஆகும்

புது ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்படும்

சாம்சங் நிறுவனம் அடுத்த தலைமுறை கேலக்ஸி ஃபிளாக்ஷிப் மாடல்களின் அறிமுக நிகழ்வு பற்றிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி இந்த ஆண்டிற்கான முதல் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு பிப்ரவரி 1 ஆம் தேதி சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், புது கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி இருக்கிறது.

புது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1999 ஆகும். எனினும், புது ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்படும் என சாம்சங் அறிவித்து இருக்கிறது. இந்திய வெளியீட்டு தேதி மற்றும் விலை பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. விற்பனை தேதி வரை முன்பதிவுகள் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

Samsung Galaxy S23 மற்றும் Galaxy S23+ பற்றிய செய்திகள் இந்த போன்கள் மூன்று பின்புற கேமராக்களைப் பெறும் என்றும், Galaxy S23 Ultra நான்கு பின்புற கேமராக்களுடன் வழங்கப்படும், இதில் ஒரு லென்ஸ் 200 மெகாபிக்சல்கள் இருக்கும்.

Galaxy S23 மற்றும் Galaxy S23+ ஆனது 8GB RAM உடன் 256GB வரை ஸ்டோரேஜுடன் வழங்கப்படும் மற்றும் Galaxy S23 Ultra ஆனது 12GB RAM உடன் 1TB ஸ்டோரேஜுடன் வழங்கப்படும். விலையைப் பொறுத்தவரை, புதிய தொடரின் விலை Galaxy S22 யின் விலையைப் போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் சாம்சங் சிறப்பு சிப்செட்டையும் வழங்க முடியும்.

புதிய கேலக்ஸி ஃபிளாக்ஷிப் போனை முன்பதிவு செய்வது எப்படி?

– சாம்சங் இந்தியா வலைதளத்தில் Pre Reserve பட்டனை க்ளிக் செய்ய கேலக்ஸி Pre Reserve VIP பாஸ் பெறவும்.

– ரூ. 1999 கட்டணத்தை ஏதேனும் பிரீபெயிட் பேமண்ட் முறையில் செலுத்தவும்.

– ஈமெயில் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு கேலக்ஸி Pre Reserve VIP பாஸ் அனுப்பப்படும்.

– வெற்றிகரமாக முன்பதிவு செய்தவுடன், வரவேற்பு மின்னஞ்சல் கிடைக்கும். அதில் முன்பதிவு செய்ததற்கான பலன்கள் விரிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும்.

– சாம்சங் வலைதளம் சென்று அடுத்த கேலக்ஸி சாதனங்களை தற்போதைய பலன்களை கொண்டு வாங்கிக் கொள்ளலாம்.

– அடுத்த கேலக்ஸி சாதனத்திற்கு பணம் செலுத்தும் போது முன்பதிவுக்காக செலுத்திய ரூ. 1999 தொகை கழிக்கப்பட்டு விடும்.

– முன்பதிவு காலக்கட்டம் நிறைவுபெறும் வரை கூப்பனை பயன்படுத்தவில்லை எனில், அது தானாக ரத்து செய்யப்படும். முன்பதிவு கட்டணம் செலுத்திய கணக்கிற்கே தொகை திருப்பி அனுப்பப்படும்.

தற்போது அறிவிக்கப்பட்டு இருப்பது வெறும் முன்பதிவு சலுகைகள் தான். விற்பனைக்கான சலுகைகள் அடுத்த மாதம் விற்பனை துவங்கும் போது அறிவிக்கப்படும். வழக்கத்தை போன்றே இந்த முறையும் சாம்சங் லைவ் நடத்த அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதில் பயனர்களுக்கு அதிக சலுகைகள், அதிவேக டெலிவரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo