சாம்சங் மிலிட்டரிக்காக அறிமுகம் செய்தது Galaxy S23 யின் சிறப்பு எடிசன்.

சாம்சங் மிலிட்டரிக்காக அறிமுகம் செய்தது Galaxy S23 யின் சிறப்பு எடிசன்.
HIGHLIGHTS

Samsung Galaxy S23 மற்றும் Galaxy XCover 6 Pro ஆகியவற்றின் தந்திரோபாய பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த ஸ்மார்ட்போன்கள் "மிஷன்-ரெடி" போன்கள் என்று அழைக்கப்படுகின்றன

கூடுதல் softwar மற்றும் பாதுகாப்புடன் கரடுமுரடான கேஸ்களுடன் இந்த போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

சாம்சங் தனது ப்ளாக்ஷிப் போனான Samsung Galaxy S23 மற்றும் Galaxy XCover 6 Pro ஆகியவற்றின் தந்திரோபாய பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, அவை அமெரிக்க இராணுவத்தை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் "மிஷன்-ரெடி" போன்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த போன்கள் அமெரிக்க ராணுவ பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்கின்றன. இந்த ஃபோன்கள் ஆண்ட்ராய்டு டீம் அவேர்னஸ் கிட் (ATAK) மற்றும் போர்க்கள உதவியுடனான ட்ராமா டிஸ்ட்ரிபியூட்டட் அப்சர்வேஷன் கிட் (BATDOK) உடன் வருகின்றன. கூடுதல் softwar மற்றும் பாதுகாப்புடன் கரடுமுரடான கேஸ்களுடன் இந்த போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

Samsung Galaxy S23 Tactical எடிசன் அம்சம்.

Galaxy S23 Tactical Edition ஆனது பிரத்தியேகமான நைட் விஷன் , ஸ்டெல்த் மோட் மற்றும் லோக் ஸ்க்ரீன் தானாக சுழலும் போன்ற அம்சங்களுடன் வருகிறது. இது கேலக்ஸி S23 இன் இயல்பான பதிப்பைப் போலவே 6.1-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 ப்ரோசெசர் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. Galaxy S23 மூன்று பின்புற கேமராக்களுடன் வருகிறது, இதில் முதன்மை லென்ஸ் 50 மெகாபிக்சல்கள். போனின் கேமரா மூலம் 8K வீடியோ ரெக்கார்டடிங் செய்ய முடியும். இது தவிர, இது 360 டிகிரி ஆடியோ ரெக்கார்டிங்கையும் கொண்டுள்ளது.

Samsung Galaxy S23 Tactical Edition ஆனது 25W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 3900mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Samsung Galaxy XCover 6 Pro தந்திரோபாய பதிப்பு முரட்டுத்தனமான வடிவமைப்புடன் வருகிறது. இது இராணுவ தர MIL-STD-810H சான்றிதழைப் பெற்றுள்ளது மற்றும் 1.5 மீட்டர் டிராப் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளது. இது வாட்டர் ரெசிஸ்டண்டிற்க்கான IP68 ரேட்டிங்கை பெற்றுள்ளது.

இந்த ஃபோனில் 6.6 இன்ச் பிஎல்எஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் முழு எச்டி பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதம் உள்ளது. இந்த போனில் 6ஜிபி ரேம் மற்றும் 4050எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் உள்ளது. தொலைபேசியில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இதில் முதன்மை லென்ஸ் 50 மெகாபிக்சல்கள். Samsung DeX ஆனது Galaxy S23 மற்றும் Galaxy XCover 6 Pro தந்திரோபாய பதிப்புடன் ஆதரிக்கப்படுகிறது. இந்த ஃபோன்களுடன் 5G, Wi-Fi 6E மற்றும் சிட்டிசன் பிராட்பேண்ட் ரேடியோ சேவை (CBRS) ஆகியவற்றுக்கான ஆதரவு உள்ளது. போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டாலும் அதன் பாதுகாப்பு வேலை செய்யும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo