Samsung Galaxy Unpacked 2023 யில் Samsung Galaxy S23 தொடரின் மூன்று ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ளது. Galaxy S23 சீரிஸ் கீழ் மூன்று போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இதில் Galaxy S23, Galaxy S23 Plus மற்றும் Galaxy S23 Ultra ஆகியவை அடங்கும். மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் உட்பட பல மாற்றங்களுடன் Samsung Galaxy S23 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எளிமையாகச் சொன்னால், Samsung Galaxy S23 தொடர் போன்களைத் தயாரிப்பதில் சாம்சங் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளது. பவர் பட்டன், வால்யூம் பட்டன், எஸ் பென் மற்றும் ஸ்கிரீன் ப்ரொடெக்டர் கிளாஸ் ஆகியவையும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்டவை. சாம்சங் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ராவில் 200 மெகாபிக்சல் கேமராவை வழங்கியுள்ளது, இதில் ஸ்பேஸ் ஜூம் உள்ளது.
இரு மாடல்களிலும் முறையே 6.1 இன்ச் மற்றும் 6.6 இன்ச் FHD பிளஸ் டைனமிக் AMOLED 2x இன்ஃபினிட்டி ஒ ஃபிளாட் டிஸ்ப்ளே, 48 முதல் 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அதிகபட்சம் 1750 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.
புதிய கேலக்ஸி S23 மற்றும் S23 பிளஸ் ஸ்மார்ட்போன்களும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராசஸர் கொண்டிருக்கின்றன. இது மற்ற ஸ்மார்ட்போன்களில் உள்ள 3.2GHz கிளாக் வேகத்தை விட 3.36GHz கிளாக் வேகம் கொண்டிருக்கிறது. மேலும் இந்த முறை எக்சைனோஸ் பிராசஸர் கொண்ட வெர்ஷன்களும் அறிமுகம் செய்யப்படவில்லை. இரு ஸ்மார்ட்போன்களிலும் வேப்பர் சேம்பர் கூலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஒன்யுஐ 5.1, மூன்று கேமரா சென்சார்கள், ஆர்மர் அலுமினியம் ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிய கார்னிங் கொரில்லா விக்டஸ் 2 கொண்ட முதல் ஸ்மார்ட்போன்களில் புது கேலக்ஸி S23 சீரிஸ் இடம்பெற்று இருக்கிறது. ஸ்மார்ட்போன்களின் முன்புறம் மற்றும் பின்புறங்களில் இந்த பாதுகாப்பு கிலாஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய சாம்சங் கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஃபேண்டம் பிளாக், கிரீன், கிரீம் மற்றும் லாவண்டர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு சந்தைக்கு ஏற்ப கிராஃபைட் மற்றும் லைம் நிறங்களும் வழங்கப்படுகின்றன.
சாம்சங் கேலக்ஸி S23 (8 ஜிபி ரேம், 128 ஜிபி) விலை 799.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 65 ஆயிரத்து 495 என துவங்கி, டாப் எண்ட் மாடல் விலை 859.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 70 ஆயிரத்து 495 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கேலக்ஸி S23 பிளஸ் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை 999.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 81 ஆயிரத்து 970 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை 119.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 91 ஆயிரத்து 810 ஆகும்.
இரு ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை பிப்ரவரி 17 ஆம் தேதி துவங்குகிறது.