டூயல் கேமரா செட்டப் உடன் அறிமுகமாகலாம் Galaxy S10E

Updated on 04-Feb-2019
HIGHLIGHTS

இதில் மவுண்டட் சைட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொண்டிருக்கும்

முக்கிய குறிப்பு 

லீக் யின் படி  Infinity-O டிஸ்பிளே உடன் வரும் 
டூயல் பின் கேமரா செட்டப் கொண்டிருக்கும் 
இதில் மவுண்டட் சைட் பிங்கர்ப்ரின்ட்  சென்சார் கொண்டிருக்கும்
 

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் சாம்சங்கின் அதன் Galaxy S10 series அறிமுக செய்வதற்க்கு  தயார் செய்து வருகிறது மற்றும்  சீக்கிரமாகவே  இந்த சீரிஸ் அறிமுக செய்யும்.இதற்க்கு  நடுவில் இந்த சீரிஸ் யின் ஒரு பகுதி  சில லீக் இந்த சாதனத்தை பற்றி லீக் ஒரு அறிக்கையில் நம் முன்னே வந்தது.இந்த லீக் மூலம் இந்த போனின் டிசைனை பற்றி இந்த போட்டோவில்  தெரிய வந்தது. Samsung Galaxy S10E  ஸ்மார்ட்போனில்  இன்பினிட்டி ஓ டிஸ்பிளே  பேனல் உடன் காணப்பட்டது இதனுடன் இந்த போனில் இரண்டு பின்கேமரா மற்றும்  சைட்  மவுண்டட் பிங்கர்ப்ரின்ட்  சென்சாருடன்  அறிமுகமாகலாம்  என கூறப்படுகிறது.

கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமரா டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்பட்டிருக்கிறது. கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் ஒற்றை செல்ஃபி கேமராவும், கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனில் இரு செல்ஃபி கேமராக்களும் வழங்கப்படுகிறது. பின்புறம் ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை என்பதால் புதிய ஸ்மார்ட்போன்களில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போன்களில் பிரத்யேகமாக பிக்ஸ்பி பட்டன் வழங்கப்படுகிறது. இந்த பட்டன் வழக்கம்போல வால்யூம் ராக்கரின் கீழ் பொருத்தப்பட்டிருக்கிறது.

புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களில் 2960×1440 பிக்சல் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சைனோஸ் 9820 அல்லது குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி எஸ்10 லைட் எனும் புதிய ஸ்மார்ட்போனும் இம்முறை அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

புதிய கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் இதில் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்படலாம் என கூறப்படுகிறது. நிறங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்10 சீரிஸ் பிளாக், வைட் மற்றும் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கும்.

கேலக்ஸி எஸ்10 இ வேரியன்ட் எல்லோ நிறம் கொண்டிருக்கும் என தெரிகிறது. விலையை பொருத்தவரை கேலக்ஸி எஸ்10 5.8 இன்ச் வேரியன்ட் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ.60,730 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய எஸ்10 சீரிஸ் டாப்  எண்ட் மாடலாக அறியப்படும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் 1 டி.பி. (1000 ஜி.பி.) மெமரி வேரியண்ட் விலை இந்திய மதிப்பில் ரூ.1,27,005 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :