digit zero1 awards

ட்ரிப்பில் கேமரா ஸ்மார்ட்போன் கேள்வி பட்டு இருக்கோம் ஐந்து கேமராக்களுடன் ஒரு ஸ்மார்ட்போன…!

ட்ரிப்பில் கேமரா ஸ்மார்ட்போன் கேள்வி பட்டு இருக்கோம் ஐந்து கேமராக்களுடன் ஒரு ஸ்மார்ட்போன…!
HIGHLIGHTS

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 பிளஸ் 5 கேமராக்களுடன் ஸ்மார்ட்போன் தயாராகி வருகிறது.வாருங்கள் தொடர்ந்து பார்ப்போம் அதை பற்றிய தகவல்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த புதிய விவரங்கள் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் சாம்சங் நிறுவனம் டூயல் செல்ஃபி கேமரா வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

கொரிய செய்தி நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டிருக்கும் தகவல்களில், புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் மூன்று பிரைமரி கேமராக்களை வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இவற்றில் வேரியபிள் அப்ரேச்சர் சென்சார், சூப்பர் வேறு -ஆங்கிள் கேமரா மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி எஸ்9 பிளஸ் மாடலில் சாம்சங் 12 எம்பி வைடு-ஆங்கிள் கேமரா, 12 எம்பி டெலிஃபோட்டோ கேமரா வழங்கியிருக்கும் நிலையில், இந்த மாடலின் அப்டேட்செய்யப்பட்ட வெர்ஷனாக வெளியாக இருக்கும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனில் இதே போன்ற கேமரா அமைப்புடன் 16 எம்பி அல்ட்ரா-வைடு-ஆங்கில் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் அல்ட்ரா-வைடு-ஆங்கிள் கேமரா வழங்கப்படும் பட்சத்தில் இது 120- என்கில் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடல் பியான்ட் 2 என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் என்றும் இது ஐந்து கேமரா செட்டப் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாகவும் இருக்கும் கூறப்படுகிறது.

இருப்பினும் டூயல் செல்ஃபி கேமரா கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்காது. ஏற்கனவே சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ8 பிளஸ் மாடலில் அந்நிறுவனம் 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.9 அப்ரேச்சர், 8 எம்பி இரண்டாவது கேமரா, f/1.9 அப்ரேச்சர் வழங்கி இருக்கிறது. பின்புறம் 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா 2019-இல் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரிண்ட் சென்சார் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதேபோன்று கேலக்ஸி எஸ்10 மாடலில் 5.8 இன்ச் மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் 6.3 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் இவற்றில் சாம்சங்-இன் எக்சைனோஸ் பிராசஸர் மற்றும் ஆன்ட்ராய்டு பி பிளாட்போர்மில் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo