இன்று இந்தியாவில் அறிமுகமாகும் Samsung Galaxy On6 ஸ்மார்ட்போன்..!
Samsung Galaxy On6 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மூலம் மிக சிறப்பாக விற்பனை செய்யப்படும்
தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங், தனது புதிய கேலக்ஸி ஆன் சீரிஸ் ஸ்மார்ட்போனின் வெளியீடு ஜுலை 2-ம் தேதி நடைபெறும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
ப்ளிப்கார்ட் தளத்தில் புதிய கேலக்ஸி ஆன் ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கென பிரத்யேக வலைப்பக்கத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த பக்கத்தில் ஸ்மார்ட்போன் வெளியீடு மற்றும் நடிகர் டைகர் ஷ்ராஃப் விளம்பர தூதராக இருக்கிறார். மேலும் இதில் மூன்று டீசர் வீடியோக்கள் பதிவிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஒற்றை பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஆன்6 என அழைக்கப்படும் என்றும் இதில் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நாம் இதன் லீக் பார்த்தல் உங்களுக்கு நங்கள் தெரிய படுத்துகிறோம் இந்த சாதனத்தை நிறுவனம் உங்களுக்கு Rs 15,000க்கு பக்கத்தில் அறிமுகப்படுத்தும். இடநத சாதனம் இந்த விலை படிஜட்டில் இருந்தால் இது iaomi Redmi Note 5, Asus Zenfone Max Pro M1 மற்றும் Oppo Realme 1 உடன் கடுமையாக மோதும் விதமாக இருக்கும்.
இத்துடன் கேலக்ஸி ஆன்6 மாடலில் சாட் ஓவர் வீடியோ அம்சம் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது. இந்த அம்சத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் வீடியோக்களை பார்த்து கொண்டே சாட் செய்ய முடியும். விலையை பொருத்த வரை புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கேலக்ஸி ஆன்6 ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 5 ப்ரோ மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி6 மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 9-ம் தேதி நடைபெற இருக்கும் அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile