Samsung Galaxy Note 9 ஸ்மார்ட்போன் AMOLED டிஸ்பிளே மற்றும் Exynos 9810 உடன் இந்தியாவில் அறிமுகமானது…!

Samsung Galaxy Note 9 ஸ்மார்ட்போன் AMOLED டிஸ்பிளே மற்றும் Exynos 9810 உடன் இந்தியாவில் அறிமுகமானது…!
HIGHLIGHTS

சாம்சங் நோட் 9 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் குவாட் HD பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, பெசல்-லெஸ் ஸ்கிரீன், நோட் 8 போன்றே காட்சியளிக்கிறது.

Samsung  Note 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்தியாவில் நோட் 9 ஸ்மார்ட்போனின் முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டது.
  
சாம்சங் நோட் 9 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் குவாட் HD  பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, பெசல்-லெஸ் ஸ்கிரீன், நோட் 8 போன்றே காட்சியளிக்கிறது. 

போட்டோக்கள் எடுக்க கேலக்ஸி எஸ்9 சீரிஸ் போன்றே 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.5, f/2.4 அப்ரேச்சர், 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கொண்ட இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஐரிஸ் சென்சார், கைரேகை சென்சார் இம்முறை கேமராவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, பிக்ஸ்பி அசிஸ்டண்ட் சேவை மற்றும் இதனை இயக்க பிரத்யேக ஹார்டுவேர் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட எஸ் பென் ஸ்டைலஸ் ப்ளூடூத் வசதி மற்றும் பட்டன் கொண்டுள்ளது. இதை கொண்டு செல்ஃபி மற்றும் வழக்கமான புகைப்படம் போன்றவற்றை எடுக்க முடியும். கேமராவை ஆன் செய்து ஸ்டைலஸ்-இல் உள்ள பட்டனை க்ளிக் செய்தால் வேலை முடிந்தது. மேலும் இந்த பட்டன் கொண்டு வீடியோவை பிளே, பாஸ் மற்றும் பல்வேறு அம்சங்களை இயக்க முடியும்.

நோட் 9 ஸ்மார்ட்போனில் AKG டியூன் செய்த ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் சவுன்டு சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள ஏ.ஆர். எமோஜி மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் முகத்தில் உள்ள 100-க்கும் அதிக முக நுனுக்கங்களை கண்டறிந்து 3D மாடல் ஒன்றை உருவாக்கி உங்களது முகபாவனைகளை உருவாக்குகிறது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நோட் 9 மாடலில் அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

Samsung  கேலக்ஸி நோட் 9 சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960×1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– ஆக்டா-கோர் சாம்சங் எக்சைனோஸ் 9810 பிராசஸர்
– மாலி G72MP18 GPU
– 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
– 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி
– மெமரியை நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ)
– சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.4-f/1.5, எல்.இ.டி. ஃபிளாஷ், 960fps சூப்பர் ஸ்லோ-மோ
– 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 8 எம்பி ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமரா, f/1.7
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
– ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
– BLE எஸ் பென்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 3.1
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர் மற்றும் வயர்லெஸ்

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், லாவென்டர் பர்ப்பிள், மெட்டாலிக் காப்பர் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த நிறங்களுக்கு ஏற்ற நிறத்தில் எஸ் பென், ஓசன் புளு ம்ற்றும் எல்லோ எஸ் பென் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.67,900 என்றும் 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் ரூ.84,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கேலக்ஸி நோட் 9 விற்பனை ஆகஸ்டு 24-ம் தேதி துவங்குகிறது.

ப்ளிப்கார்ட், பேடிஎம் மால், சாம்சங் ஆன்லைன் ஸ்டோல் மற்றும் ஆஃப்லைன் தளங்களிலும் இந்த நோட் 9 விற்பனை நடைபெற இருக்கிறது. மேலும் ஏர்டெல் தளத்தில் ரூ.7,900 செலுத்தியும் கேலக்ஸி நோட் 9 மாடலை பெற முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo