சாம்சங் கேலக்சி Note 9யில் ஒரு 8GB RAM மற்றும் , 512GB ஸ்டோரேஜ் இருக்கலாம் என தெரிகிறது

சாம்சங்  கேலக்சி Note 9யில் ஒரு 8GB RAM மற்றும் , 512GB ஸ்டோரேஜ் இருக்கலாம்  என தெரிகிறது
HIGHLIGHTS

இந்த சாம்சங் கேலக்சி Note 9 ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் என தெரிகிறது, இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் இது சீனா வெப்சைட்டில் லீக் ஆகியுள்ளது

இந்த சாம்சங் கேலக்சி Note 9 ஆகஸ்ட்  மாதம் அறிமுகமாகும் என தெரிகிறது, இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் இது சீனா வெப்சைட்டில் லீக் ஆகியுள்ளது இது  ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டிருக்கும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் லீக் ஆன நிலையில், இம்முறை எக்சைனோஸ் சிப்செட் கொண்ட வேரியன்ட் விவரங்கள் லீக் ஆகியுள்ளது. 

சாம்சங்  கேலக்சி Note 9 யில் ஒரு அதிக மெமோரி உடன் வரும் என தெரிகிறது, இந்த லீக் மூலம் இதில் ஒரு GB யின்  RAM மற்றும் 512GB ஜிபி  ஸ்டோரேஜ் இருக்கும் என தெரிகிறது, சமீபத்தில் Galaxy S9+ நிறைய மெமரி வழங்கி இருந்தது அதில் 6GB யின் RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வழங்கி இருந்தது   ஆனால்  கேலக்சி Note 9 யில் அதையும் மிஞ்சி விட்டது மிகவும் பிரமாண்டமான ஸ்டோரேஜ் உடன் இது களமிறங்கும் என தெரிகிறது 

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு  எக்சைனோஸ் 9810 சிப்செட் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. முன்னதாக சாம்சங் நிறுவனம் வெளியிட்ட கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களிலும் எக்சைனோஸ் 9810 சிப்செட் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்டாகோர் சிப்செட் 1.79 ஜிகாஹெர்ட்ஸ் கொண்டிருப்பதோடு, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என சீன வலைத்தளத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கிள் கோர் சோதனையில் இந்த சாதனம் 2737 புள்ளிகளை பெற்றிருக்கும் நிலையில், மல்டி-கோர் சாதனம் 9064 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இது ஸ்னாப்டிராகன் பெற்றிருந்த வேரியன்ட்-ஐ விட அதிகம் ஆகும். ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்ட வேரியன்ட் சோதனையில் 2190 மற்றும் 8806 புள்ளிகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்கள் முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் அறிமுக நிகழ்வு ஜூலை 29-ம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் முந்தைய கேலக்ஸி நோட் போன்றே காட்சியளிக்கும் என்றும் இதன் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழக்கமான கேலக்ஸி மாடல்களை போன்றே பின்புறம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே பைங்காரப்ரின்ட் சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo