Samsung galaxy Note 9 இன்டர்நெட்டில் லீக் ஆனது….!

Updated on 23-Jul-2018
HIGHLIGHTS

சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், புதிய நோட் 9 சார்ந்த பல தகவல்கள் மற்றும் அம்சங்கள் இன்டர்நெட்டில் லீக் ஆகி வருகிறது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் வெளியீட்டு அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், புதிய நோட் 9 சார்ந்த பல தகவல்கள் மற்றும் அம்சங்கள் இன்டர்நெட்டில் லீக் ஆகி வருகிறது.

இதுவரை கான்செப்ட் படங்கள், சிறப்பம்சங்கள், போன்ற தகவல்கள் வெளியான நிலையில், கேலக்ஸி நோட் 9  போட்டோக்கள் இன்டர்நெட்டில் லீக் ஆகிவிட்டது. இதில் ஸ்மார்ட்போனின் பிரைமரி கேமரா, பிங்காரப்ரின்ட் சென்சார் கேமரா சென்சாரின் கீழ் பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

கேலக்ஸி நோட் 8 போன்றே நோட் 9 ஸ்மார்ட்போனும் செவ்வக வடிவில் பிளாக் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் எக்சைனோஸ் 9810 அல்லது ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம் என்றும் இதன் கேமரா சென்சார்கள் கேலக்ஸ் எஸ்9 பிளஸ் போன்றும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 4000 MAH . பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நோட் 9 சாதனத்தில் அதிகபட்சம் 512ஜிபி மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முந்தைய கேலக்ஸி எஸ்9 சீரிஸ் மாடலில் 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் நோட் 9 அறிமுக விழாவில் பிக்ஸ்பி 2.0 அறிமுகம் செயய்ப்படலாம் என கூறப்படுகிறது. புதிய நோட் 9 ஸ்மார்ட்போனுடன் மேம்படுத்தப்பட்ட எஸ் பென், மியூசிக் பிளேபேக் கன்ட்ரோல், செல்ஃபி டைமருக்கு நீண்ட நேரம் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் தனது கேலக்ஸி நோட் 9 மாடலை ஆகஸ்டு 9-ம் தேதி வெளியிட இருக்கும் நிலையில், இதே நிகழ்வில் அந்நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் சாதனமும் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் கியர் எஸ்4 சாதனம் தான் கேலக்ஸி வாட்ச் என்ற பெயரில் வெளியாகலாம் என கூறப்பட்டு இருந்தது. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :