Samsung Galaxy M35 5G போன் இந்தியாவில் 6,000mAh பேட்டரியுடன் அறிமுகம்

Updated on 17-Jul-2024
HIGHLIGHTS

Samsung இந்திய சந்தையில் அதன் Samsung Galaxy M35 5G அறிமுகம் செய்தது

Samsung Galaxy M35 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது

Samsung Galaxy M35 5G யின் 8GB/128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 16,999 ரூபாயாக இருக்கிறது.

Samsung இந்திய சந்தையில் அதன் Samsung Galaxy M35 5G அறிமுகம் செய்தது Galaxy M35 5G ஆனது 6.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது. Samsung Galaxy M35 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் இதிலிருக்கும் விலை மற்றும் சுவாரஸ்மான அம்சங்கள் பற்றி பார்க்கலாம்..

Samsung Galaxy M35 5G விலை தகவல்.

Samsung Galaxy M35 5G யின் 8GB/128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 16,999 ரூபாயாக இருக்கிறது. மற்றும் 12GB/256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 19,999ரூபாயாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 20 முதல் ஜூலை 21 வரை நடைபெறும் அமேசான் பிரைம் டே சேலில் இ-காமர்ஸ் தளமான அமேசானில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் மூன்லைட் ப்ளூ, டேபிரேக் ப்ளூ மற்றும் தண்டர் கிரே ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

#Samsung Galaxy M35 5G விலை தகவல்

Samsung Galaxy M35 5G டாப் அம்சங்கள்

Samsung Galaxy M35 5G ஆனது 6.6-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது FHD+ தெளிவுத்திறன், 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 1000 nits ஹை ப்ரைட்னஸ் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது . டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் பாதுகாப்புடன் பொருத்தப்பட்டுள்ளது, இது 4x சிறந்த கீறல் ரெசிஸ்டன்ட் மற்றும் 2.0 மீட்டர் தாங்கும் திறனை வழங்குவதாக கூறப்படுகிறது.

இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால், Galaxy M35 யில் உள்ள Exynos 1380 SoC உள்ளது. ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இது வேப்பர் கூலிங் சேம்பர் மற்றும் மென்மையான கேமிங் அனுபத்தை வழங்கும் Galaxy M35 யில் Android 14 யில் One UI 6.1 யில் வேலை செய்கிறது.

#Samsung Galaxy M35

இந்த போனில் கேமரா செட்டிங் பற்றி பேசினால், இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் OIS சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில், இது 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 25W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த பேட்டரி இரண்டு நாட்களுக்கு நீடிக்கும். மேலும் இதில் ஆண்ட்ரோய்ட் 4 அப்டேட் மற்றும் செக்யூரிட்டி 5 அப்டேட் போன்றவை வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க OnePlus Nord 4 இந்தியாவில் அறிமுகம், இதில் 5,500mAh பேட்டரி இருக்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :