Samsung திடிரென இந்த 5G போனின் விலையை குறைத்துள்ளது

Updated on 16-Feb-2024
HIGHLIGHTS

Samsung Galaxy M34 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது

Samsung Galaxy M34 5G ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்டில் வருகிறது

இந்த வேரியன்ட் இரு யின் விலையும் 3,000.ரூபாய் வரை குறைத்துள்ளது.

நீங்கள் குறைந்த விலையில் Samsung யிலிருந்து 5G ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இது உங்களுக்கு சரியான நேரமாக இருக்கும், Samsung Galaxy M34 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது அதனை தொடர்ந்து தற்பொழுது இதன் விலையை குறைத்துள்ளது. Samsung Galaxy M34 5G ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்டில் வருகிறது இந்த இரு வேரியன்ட் யின் விலையும் 3,000.ரூபாய் வரை குறைத்துள்ளது.

புதிய விலை தகவல்

Samsung Galaxy M34 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. நிறுவனம் 6GB+128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் 18,999 ரூபாயிலும் , 8GB+128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 20,999ரூபாய்க்கும் வைக்கப்பட்டது, அதனை தொடர்ந்து இதன் விலை குறைப்புக்கு பிறகு 6GB வேரியண்டின் விலை 15,999ரூபாய்க்கும், 8GB வேரியண்டின் விலை 17,999 ரூபாய்க்கும் வைக்கப்பட்டுள்ளது இந்த போன் மூன்று கலர் வேரியண்டில் வருகிறது Midnight Blue, Prism Silver மற்றும் Waterfall Blue கலர்களில் வருகிறது, இதை தவிர நிறுவனம் ICICI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டிலிருந்து வாங்குவோர்களுக்கு 1000ரூபாய் இன்ஸ்டன்ட் தள்ளுபடியை வழங்குகிறது

Samsung Galaxy M34 5G யின் சிறப்பம்சம்.

ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் FHD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 1080×2340 பிக்சல்கள் தீர்மானம், 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 1000 nits ஹை ப்ரைட்னாஸ் ஆகியவற்றை வழங்குகிறது. செயல்திறனுக்காக, இது ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1280 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதன் 128ஜிபி உள் சேமிப்பை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை அதிகரிக்க முடியும்.

Samsung Galaxy M34 5G

இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் அடிப்படையில் OneUI யில் இயங்குகிறது. கேமரா பிரிவில், 50எம்பி மெயின் சென்சார், 8எம்பி அல்ட்ராவைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2எம்பி மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றைக் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. போனின் முன்பக்கத்தில் 13MP செல்ஃபி கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்த கைபேசி 6000mAh பேட்டரியுடன் வருகிறது, இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது செக்யுரிட்டிகாக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பின்கரிப்ரின்ட் சென்சார் உள்ளது.

இதையும் படிங்க: வெறும் 7 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான Motorola மாஸான போன்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :