நீங்கள் குறைந்த விலை Samsung Galaxy M14 ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இது உங்களுக்கு சரியான நேரமாக அமையும் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் விலையை சாம்சங் நிறுவனம் குறைத்துள்ளது. இந்த போன் இரண்டு வகைகளில் வருகிறது மற்றும் இரண்டும் ரூ. 1000 விலைக் குறைப்பைப் பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy M14 ஆனது இரண்டு வகைகளில் வருகிறது – 4GB + 64GB மற்றும் 6GB + 128GB மற்றும் விலை முறையே ரூ.13,490 மற்றும் ரூ.14,990. இருப்பினும், ரூ.1000 தள்ளுபடிக்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் இப்போது 64ஜிபி பதிப்பை ரூ.12,490க்கும், 128ஜிபி வகையை ரூ.13,990க்கும் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ஐசி சில்வர், பெர்ரி ப்ளூ மற்றும் ஸ்மோக்கி டீல் ஆகிய மூன்று கலர் விருப்பங்களில் வாங்கலாம்.
சாம்சங்கின் இந்த போனில் 6.6-கொண்ட FHD+ LCD டிஸ்பிளே உடன் வருகிறது மற்றும் இதில் 90Hz ரெஃப்ரஷ் ரெட் வழங்குகிறது இது தவிர இதில் , செல்ஃபி கேமராவுக்காக வாட்டர் டிராப் நாட்ச் ஒன்றும் இதில் வழங்கப்பட்டுள்ளது. சாதனமானது Mali-G68 MP2 GPU உடன் இணைக்கப்பட்ட octa-core Exynos 1330 சிப்செட்டிலிருந்து சக்தியைப் வழங்குகிறது .
இதையும் படிங்க:
இதையும் படிங்க:Samsung TV யூசரா நீங்கள் மார்ச் 1 முதல் Smart Tv யில் இந்த அம்சம் வேலை செய்யாது
இந்த போனின் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் வழியாக 1TB வரை அதிகரிக்கலாம், இது தவிர ரேமை 6ஜிபியாக அதிகரிக்க இது ரேம் பிளஸை சப்போர்ட் செய்கிறது . கேமரா பிரிவில், இந்த ஃபோன் 50MP பிரைமரி கேமராவை வழங்குகிறது, இது 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் உடன் சப்போர்ட் செய்கிறது . செல்ஃபிக்களுக்காக 13எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது.
சாஃப் ட்வ்ர் பொறுத்தவரை, Galaxy M14 ஃபோன் ஆண்ட்ராய்டு 13 உடன் One UI 5.1 கோர் மூலம் இயங்குகிறது. இதில் 6000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது தவிர, இணைப்பு விருப்பங்களில் 5G SA/NSA, Dual 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.2, GPS/GLONASS/Beidou மற்றும் USB Type-C ஆகியவை அடங்கும்.