Samsung Galaxy M14 5G குறைந்த விலையில் அறிமுகம்.
சாம்சங் அதன் புதிய 5G போன் Samsung Galaxy M14 இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது
இந்த பட்ஜெட் ரேன்ஜில் சாம்சங்கின் புதிய 5G போனாகும்.
Samsung Galaxy M14 5G யில் டார்க் ப்ளூ மற்றும் சில்வர் கலரில் அறிமுகமானது
சாம்சங் அதன் புதிய 5G போன் Samsung Galaxy M14 இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது, இந்த பட்ஜெட் ரேன்ஜில் சாம்சங்கின் புதிய 5G போனாகும். இந்த போன் முதலில் ஐரோப்பிய சந்தையில் கிடைத்தது, இப்போது அது இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் 5nm Exynos 1330 ப்ரோசெசர் மற்றும் 6 GB RAM உடன் 128 GB ஸ்டோரேஜுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Samsung Galaxy M14 5G விலை தகவல்.
Samsung Galaxy M14 5G யில் டார்க் ப்ளூ மற்றும் சில்வர் கலரில் அறிமுகமானது 4 ஜிபி ரேம் கொண்ட 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.13,490 ஆகவும், 6 ஜிபி ரேம் கொண்ட 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.14,990 ஆகவும் வைக்கப்பட்டுள்ளது. இந்த போன் இரண்டு ஸ்டோரேஜில் இருக்கிறது இந்த போனை சாம்சங் இணையதளமான அமேசான் இந்தியா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை கடைகளில் ஏப்ரல் 21 முதல் வாங்கலாம் இந்த விலை பேங்க் ஆஃபர் உட்பட கொடுக்கப்பட்டுள்ளது
Samsung Galaxy M14 5G சிறப்பம்சம்.
Samsung Galaxy M14 5G யில் 6.6 இன்ச் முழு HD ப்ளஸ் PLS LCD டிஸ்பிளே பேனல் கொண்டுள்ளது. இது (2,408 x 1,080 பிக்சல் ) ரெஸலுசனுடன் வருகிறது, இதனுடன் இது 90Hz ரெப்ரஸ் ரேட் உடன் வருகிறது. மேலும் இந்த போனில் ஒக்ட்டா கோர் Exynos 1330 ப்ரோசெசருடன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையின் கீழ் One UI 5 வழங்குகிறது, மேலும் இந்த போனில் 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் இதனுடன் 128 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, மேலும் இந்த போனில் சைட் மவுன்டெட் பிங்கர்ப்ரின்ட் ஸ்கெனர் கொண்டுள்ளது.
போட்டோகிராபி பற்றி பேசினால் இதில் மூன்று பின் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இது f/1.8 அப்ரட்ஜர் மற்றும் PDAF உடன் 50-மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கொண்டுள்ளது. ஃபோனில் மேக்ரோ மற்றும் டெப்த் ஷாட்களுக்கு இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கிடைக்கும். 1080p ரெஸலுசன் கொண்ட வீடியோக்களை தொலைபேசியில் பதிவு செய்யலாம்.
Samsung Galaxy M14 5G யில் 6,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் 25 W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது, இருப்பினும் போனில் சார்ஜர் கிடையாது, போனின் கனெக்டிவிட்டி பற்றி பேசினால், 5G, 4G, Wifi ப்ளூடூத் 5.2, NFC மற்றும் GPS இதனுடன் USB Type-C சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile