Samsung குறைந்த விலையில் தரமான Feature அறிமுகம் செய்தது

Samsung குறைந்த விலையில் தரமான Feature அறிமுகம் செய்தது
HIGHLIGHTS

Samsung நிறுவனம் Galaxy M14 4G மாடலை எந்தவித ஆரவாரமும் இல்லாமல் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

Galaxy M14 யின் 5G பதிப்பு ஏற்கனவே இந்தியாவில் கிடைக்கிறது,

இது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 25W வெளியீட்டில் சார்ஜ் செய்யப்படலாம்.

Samsung நிறுவனம் Galaxy M14 4G மாடலை எந்தவித ஆரவாரமும் இல்லாமல் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Galaxy M14 யின் 5G பதிப்பு ஏற்கனவே இந்தியாவில் கிடைக்கிறது, இது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. Galaxy M14 5G மாடலுடன் ஒப்பிடும்போது புதிய வெர்சன் சில மாற்றங்களைக் கொண்டுவருகிறது. Galaxy M14 4G ஆனது Snapdragon 480 ப்ரோசெசருடன் கொண்டுள்ளது, இது 6GB வரை ரேம் மற்றும் 128GB வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 25W வெளியீட்டில் சார்ஜ் செய்யப்படலாம்.

Samsung Galaxy M14 (4G) விலை தகவல்.

இந்தியாவில் Samsung Galaxy M14 இன் அடிப்படை 4GB + 64GB குறைந்த விலை ரூ.8,499 ஆகும். இது 6ஜிபி + 128ஜிபி மாறுபாட்டையும் கொண்டுள்ளது, இதன் விலை ரூ.11,499. Arctic Blue மற்றும் Sapphire Blue வண்ணங்களில் இந்த போனை Amazon India மூலம் வாங்கலாம். செய்தியை எழுதும் வரை, நிறுவனம் அதை அதிகாரப்பூர்வ e ஸ்டோரில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது

Galaxy M14 (4G) சிறப்பம்சம்

Samsung Galaxy M14 ஸ்மார்ட்போனை பற்றி பேசினால், இந்த போனில் இது 6.7-இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே வழங்குகிறது இதில் செல்ஃபி கேமராவிற்கான இன்ஃபினிட்டி-யு-வடிவ நாட்ச் உள்ளது. டிஸ்ப்ளே 90Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்டுடன் பொருத்தப்பட்டுள்ளது. M14 யில் Snapdragon 480 சிப்செட் கிடைக்கிறது, இதில் 6GB வரை ரேம் மற்றும் 128GB வரை ஸ்டோரேஜ் சேர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஸ்டோரேஜை பயன்படுத்தி ரேமை அதிகரிக்க முடியும். சாம்சங் கேலக்ஸி எம்14 டூயல் சிம் ஸ்லாட் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான OneUI 5.1 யில் இயங்குகிறது.

கேமராவை பற்றி பேசினால், Galaxy M14 ஆனது 5G மாடலின் அதே டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 50 மெகாபிக்சல் பிரதான சென்சார், 2 மெகாபிக்சல் செகண்டரி டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும். முன்புறத்தில் 13 மெகாபிக்சல் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Realme இந்தியாவில் இரண்டு புதிய போனை அறிமுகம் செய்துள்ளது

இந்த போனின் பெடரரி பற்றி பேசுகையில் 5,000mAh பேட்டரி கிடைக்கிறது, இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது இரண்டு OS அப்டேட்கள் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு இணைப்புகளைப் பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. ஃபோனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட்சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo