சாம்சங் கேலக்சி J7 ப்ரொவிலை இந்தியாவில் குறைந்து இப்பொழுது இது Rs 16,900க்கு கிடைக்கிறது
இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் கேலக்ஸி ஜெ7 ப்ரோ விலையில் ரூ.2000 குறைக்கப்பட்டது.
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஜெ7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் கேலக்ஸி ஜெ7 ப்ரோ விலையில் ரூ.2000 குறைக்கப்பட்டது.
மார்ச் மாத விலை குறைப்பை தொடர்ந்து கேலக்ஸி ஜெ7 ப்ரோ விலை ரூ.20,900-இல் இருந்து ரூ.18,900-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆஃப்லைன் விற்பனையகங்களில் விலை குறைப்பு அமலாக்கப்பட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.2000 மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி ஜெ7 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.16,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய விலை குறைப்பு சார்ந்த அறிவிப்பை மும்பையே சேர்ந்த மகேஷ் டெலிகாம் ட்விட்டரில் தெரிவித்து இருக்கும் நிலையில், சாம்சங் ஆன்லைன் ஸ்டோர், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற தளங்களிலும் இதுகுறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் பிரபல மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக கேலக்ஸி ஜெ7 ப்ரோ இருக்கிறது.
மெல்லிய மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டிருக்கும் கேலக்ஸி ஜெ7 ப்ரோ ஸ்மார்ட்போனின் கைரேகை சென்சார் ஹோம் பட்டனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பில்ட்-இன் என்எஃப்சி (NFC) சப்போர்ட் மூலம் சாம்சங் பே வசதியை கொண்டிருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஜெ7 ப்ரோ சிறப்பம்சங்கள்:
– 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080×1920 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்
– 3 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு நௌக்கட்
– 13 எம்பி பிரைமரி கேமரா
– 13 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை ஸ்கேனர்
– 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
– 3600 எம்ஏஎச் பேட்டரி
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile