இன்டர்நெட்டில் லீக் ஆன Samsung Galaxy J4 2018, விரைவில் வெளியாகும்
இதில் பின்புறம் கழற்றக்கூடிய வகையிலும், பேட்டரியை பயனர் மாற்றிக்கொள்ளும் வசதியை கொண்டிருக்கும் என தெரிகிறது.
சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கையை விரிவுப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. சமீபத்தில் இது குறித்த தகவல்கள் வெளியான நிலையில் நான்கு புதிய ஸ்மார்ட்போன்களும் மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக கேலக்ஸி ஜெ6 மற்றும் கேலக்ஸி ஜெ8 ஸ்மார்ட்போன்கள் பென்ச்மார்க்கிங் வலைத்தளத்தில் வெளியான நிலையில் கேலக்ஸி ஜெ4 ஸ்மார்ட்போனின் போட்டோ இன்டெனெட்டில் லீக் ஆகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் லைவ் போட்டோக்கள் சாம்சங் சப்போர்ட் வலைத்தளங்களில் கசிந்துள்ளது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேலக்ஸி ஜெ4 (SM-J400) ஸ்மார்ட்போன் சாம்சங் இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சவுதி அரேபியாவின் சப்போர்ட் பக்கங்களில் காணப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் ஸ்மார்ட்போன் நிச்சயம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை வழங்கியுள்ளதோடு முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் மூன்று நாடுகளில் விற்பனை செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது.
சாம்சங் சப்போர்ட் பக்கங்களில் பட்டியலிடப்பட்டிருப்பதோடு, கேலக்ஸி ஜெ4 ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்களும் இணையத்தில் கசிந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தாய்வானின் NCC வலைத்தளத்தில் அனுமதிக்காக சமர்பிக்கப்பட்டுள்ளது, புகைப்படங்களின் படி புதிய ஸ்மார்ட்போன் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டிருக்காது என தெரிகிறது.
இதன் ஸ்பெசிபிகேஷன் பார்த்தல் இதில் இப்போழுது இந்த ஸ்மார்ட்போன் தாய்வான் NCC சர்டிபிகேஷன் வெப்சைட்டில் காணப்படுகிறது இதில் அக்சினோஸ் குவட்கோர் ப்ரோசெசர் கொண்டுள்ளது இதன் ஸ்பீட் 1.4GHz இருக்கும். இதை தவிர இந்த சாதனத்தில் 2GB ரேம் மற்றும் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 8GB அல்லது 16GB ஸ்டோரேஜ் இருக்கும் லீக் ஆனா லைவ் போட்டோவை பார்த்தல்,இதில் சிங்கிள் லென்ஸ் கொண்ட கேமரா இருக்கிறது இதனுடன் இதில் வரடிகள் LED பிளாஷ் இருக்கிறது NCC மூலம் வந்த லிஸ்டில் இதில் சிற்றாடை சிம் சப்போர்ட் இருக்கும் இதை தவிர இதில் 3.5mmஆடியோ ஜாக் இருக்கும் மற்றும் இதில் கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் WiFi மற்றும் LTE சப்போர்ட் செய்கிறது.
இத்துடன் பின்புறம் கழற்றக்கூடிய வகையிலும், பேட்டரியை பயனர் மாற்றிக்கொள்ளும் வசதியை கொண்டிருக்கும் என தெரிகிறது. இதேபோன்று இந்த ஸ்மார்ட்போனிற்கான ப்ளூடூத் மற்றும் வைபை சான்றிதழ்களும் பெறப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்கப்படாது என்றே தெரிகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile