சாம்சங் நிறுவனத்தின் புதிய Galaxy J3 (2018), மற்றும் Galaxy J7 (2018) HD டிஸ்பிளே உடன் அறிமுகமாகியுள்ளது

சாம்சங் நிறுவனத்தின் புதிய Galaxy J3 (2018), மற்றும் Galaxy J7 (2018) HD டிஸ்பிளே உடன் அறிமுகமாகியுள்ளது
HIGHLIGHTS

சாம்சங் நிறுவனத்தின் 2018 கேலக்ஸி ஜெ3 மற்றும் ஜெ7 ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சாம்சங் நிறுவனத்தின் கடந்த ஆண்டு அறிமுகமான  Galaxy J3 (2017) மற்றும் கேலக்சி J7 (2017) புதிய வெர்சன் இந்த  2018 கேலக்ஸி ஜெ3 மற்றும் ஜெ7 ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்  சில செலக்டட்  ரிடைலர்  மற்றும் கொரியர் மூலம் வாங்கலாம் இதனுடன் நிறுவனம் கூறியுள்ளது விரைவில் இது அனைத்து இடங்களிலும் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலை பாடிய தகவல் இன்னும் தெரியவில்லை 

புதிய ஸ்மார்ட்போன்களில் 5.0 இன்ச் மற்றும் 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. 2018 கேலக்ஸி ஜெ3 ஸ்மார்ட்போனில் 8 எம்பி பிரைமரி கேமரா, f/1.9 அப்ரேச்சர், 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் அறிவிக்கப்படவில்லை.

எனினும் கீக்பென்ச் தளத்தில் வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் குவாட்கோர் எக்சைனோஸ் 7570 14என்எம் சிப்செட், 2 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதன் பேட்டரி திறன் குறித்து எவ்வித தகவலும் இல்லை.

2018 கேலக்ஸி ஜெ7 ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், 13 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9 அப்ரேச்சர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லை.

சாம்சங் கேலக்ஸி ஜெ3 (2018) சிறப்பம்சங்கள்:

– 5.0 இன்ச் 1280×720 பிக்சல் ஹெச்டி டிஸ்ப்ளே
– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் எக்சைனோஸ் 7570 14nm பிராசஸர்
– மாலி-T720 MP1
– 2 ஜிபி ரேம்
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9 அப்ரேச்சர்
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2

சாம்சங் 2018 கேலக்ஸி ஜெ3 மற்றும் 2018 கேலக்ஸி ஜெ7 ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் ஜூன் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என சாம்சங் தெரிவித்துள்ளது. 

முன்னதாக மார்ச் மாத வாக்கில் பிரபல ஸ்மார்ட்போன் டிப்ஸ்டர் எவான் பிளாஸ் வெளியிட்டிருந்த தகவல்களில் கேலக்ஸி ஜெ3 (SM-J337A) மற்றும் கேலக்ஸி ஜெ7 (SM-J337V) ஸ்மார்ட்போன்கள் வெரிசான் மற்றும் கேலக்ஸி ஜெ7 ஏரோ மற்றும் கேலக்ஸி ஜெ3 எக்லிப்ஸ் 2 என்ற பெயர்களில் விற்பனைக்கு வரலாம் என தெரிவித்திருந்தார்.

எனினும் வரும் நாட்களில் இது குறித்த முழு விவரங்கள் மற்றும் இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் இதர சந்தைகளில் வெளியிடுவது குறித்த தகவல்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo