digit zero1 awards

சாம்சங் யின் விலை குறைவான ஸ்மார்ட்போன் அறிமுகம்…!

சாம்சங் யின்  விலை குறைவான ஸ்மார்ட்போன் அறிமுகம்…!
HIGHLIGHTS

இந்த சாம்சங் புதிய போன் உங்களுக்கு ஒரு 6000ரூபாய் பட்ஜெட்டில் கிடைத்துவிடும்

சாம்சங் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது . சாம்சங்கின் முதல் ஆன்ட்ராய்டு ஓரியோ ஸ்மார்ட்போனாக கேலக்ஸி J2 கோர் மாடல் வெளியாகி இருக்கிறது.

இதில் 5.0 இன்ச் qHD TFT டிஸ்ப்ளே, சாம்சங் எக்சைனோஸ் 7570 குவாட்-கோர் 14 என்.எம். பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் 5MP  செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

புதிய கேலக்ஸி J2 கோர் ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் ஸ்மார்ட் மேனேஜர் வழங்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட்போனில் போதுமான அளவு மெமரி கொண்டிருப்பதை உறுதி செய்து, ஸ்மார்ட்போனின் வேகத்தை சீராக வைக்கும். பட்ஜெட் போன் என்பதால் பிங்கர்ப்ரிண்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி போன்றவை வழங்கப்படவில்லை.

சாம்சங் கேலக்ஸி J2 கோர் சிறப்பம்சங்கள்:

– 5.0 இன்ச் 540×960 பிக்சல் qHD TFT டிஸ்ப்ளே
– 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் எக்சைனோஸ் 7570 14nm பிராசஸர்
– மாலி-T720 MP1 GPU
– 1 ஜிபி ரேம்
– 8 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
– டூயல் சிம் ஸ்லாட்
– 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 2600 Mah. பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் ஸ்மார்ட்போன் கோல்டு, புளு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் கேலக்ஸி ஜெ2 கோர் விலை ரூ.6,190 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க அனைத்து விற்பனை மையங்கள் மற்றும் சாம்சங் இஷாப் மூலம் விற்பனை செய்யப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo