digit zero1 awards

Samsung யின் இந்த போனின் அறிமுக தேதி வெளியானது அதற்க்கு முன்பே பல லீக்

Samsung யின் இந்த போனின் அறிமுக தேதி வெளியானது அதற்க்கு முன்பே பல லீக்
HIGHLIGHTS

Samsung யின் புதிய ஸ்மார்ட்போன் Galaxy F55 இந்தியாவில் 17 மே 2024 அன்று அறிமுகப்படுத்தப்படும்.

சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் புதிய வடிவமைப்பில் வரவுள்ளது.

Samsung Galaxy F55 இரண்டு ப்ரைட் கலரான Apricot Crush மற்றும் Raisin Black யில் வரும்

Samsung யின் புதிய ஸ்மார்ட்போன் Galaxy F55 இந்தியாவில் 17 மே 2024 அன்று அறிமுகப்படுத்தப்படும். வெளியீட்டு தேதி குறித்த விவரங்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் புதிய வடிவமைப்பில் வரவுள்ளது. லெதர் ஃபினிஷில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் கிளாசி வீகன் லெதர் ஃபினிஷில் வழங்கப்படும். அதில் தனித்துவமான ஸ்ட்ரெச் பேட்டர்ன் கொடுக்கப்படும். பிரீமியம் அம்சங்கள் போனில் வழங்கப்படும்.

Samsung Galaxy F55 விலை மற்றும் கலர் தகவல்.

ட்விட்டர் X படி கிடைத்த தகவலின் படி Samsung Galaxy F55 இரண்டு ப்ரைட் கலரான Apricot Crush மற்றும் Raisin Black யில் வரும் மேலும் மே 17 அறிமுகமாகும் இதன் ஆரம்ப விலை ₹ 2X999* ஆக இருக்கும் எனக்கொரப்படுகிறது அதாவது இந்த போனில் விலை 25000ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது

இது தவிர, Samsung.com இலிருந்தும் வாங்கலாம். ஃபோனுக்கான லேண்டிங் பக்கம் Flipkart யில் லைவ் செய்யப்பட்டு உள்ளது.

Samsung Galaxy F55 சிறப்பம்சம்

லீக் ரிப்போர்ட் படி பார்த்தால் Samsung Galaxy F55 போனில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான One UI 6.1 சப்போர்டுடன் வராது. Qualcomm Snapdragon 7 Gen 1 சிப்செட் போனில் வழங்கப்படும். தொலைபேசி மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வரும்

இதன் ப்ரைமரி கேமரா 50 எம்.பி. இது தவிர, 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படலாம். மேலும் 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்படும். ஃபோன் 4K வீடியோவை 30 fps இல் பதிவு செய்ய முடியும். செல்ஃபிக்களுக்காக தொலைபேசியில் 50 எம்பி முன் கேமரா வழங்கப்படும்.

லவுட் ஸ்பீக்கர் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சப்போர்ட் போனில் வழங்கப்பட்டுள்ளது. போனில் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளது. தொலைபேசியில் 5000 mAh பேட்டரி வழங்கப்படலாம். மேலும், 45W வயர்டு சார்ஜிங் ஆதரவும் வழங்கப்படுகிறது. போன் 180 கிராம் எடையில் வழங்கப்படலாம்.

இதையும் படிங்க :Google Wallet இந்தியாவில் அறிமுகம்,Google Pay vs Google Wallet என்ன வித்தியாசம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo