Samsung Galaxy F55 5G நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனாக இருக்கும் இது விரைவில் அறிமுகமாகும், மேலும் இந்த போனை பற்றிய லேட்டஸ்ட் லீக் வெளிவந்துள்ளது இதில் இதன் விலையை பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் சிறப்பம்சங்கள் பற்றி பேசுகையில் இந்த : ஃபோன் 6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டதாக கூறப்படுகிறது. நிறுவனம் ஃபோனில் 1000 நிட்களின் ஹை ப்ரைட்னாஸ் வழங்க முடியும். தற்போது அதன் விலை லீக் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும்.
Samsung Galaxy F55 5G இந்தியாவில் அறிமுகத்திற்க்கு அருகில் இருக்கிறது, மேலும் இந்த போன் Galaxy M55 5G யின் ரீப்ரன்ட் வெர்சன் ஆகும், இதன் விலை குறித்து பிரபல டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் தெரிவித்துள்ளார். X இல் பகிரப்பட்ட போஸ்ட்டில் மூன்று ரேம் மற்றும் இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் போனை அறிமுகப்படுத்தலாம் என்று டிப்ஸ்டர் கூறியுள்ளார். அடிப்படை வேரியன்ட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும், இதன் விலை ரூ.26,999. இரண்டாவது வேரியன்ட் 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.29,999 விலையில் வெளியிடப்படும். அதேசமயம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப் வேரியண்ட் ரூ.32,999க்கு வெளியிடப்படலாம். இந்த விலை ரேஞ்சில் நிறுவனம் Galaxy M55 5G ஐ அறிமுகப்படுத்தியது.
இதுவரை கிடைத்த தகவலின்படி, Qualcomm Snapdragon 7 Gen 1 சிப்செட்டை போனில் காணலாம். இதில் 6.7 இன்ச் சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளேவைக் காணலாம். இது முழு எச்டி பிளஸ் ரேசளுசன் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த போன 120Hz ரெப்ராஸ் ரெட்டை கொண்டிருக்கும். இது 1000 நிட்களின் ஹை ப்ரைட்னாஸ் உடன் வரலாம். தவிர, பார்வை பூஸ்டர் தொழில்நுட்பத்தையும் போனில் காணலாம்.
கேமராவைப் பற்றி பேசுகையில், போனின் பின்புறத்தில் உள்ள ப்ரைம் கேமரா 50 மெகாபிக்சல்களாக இருக்கலாம். இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) உடன் வரலாம். இதனுடன், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் இதில் காணப்படுகின்றன. மேலும் இந்த போனில் 50 மெகாபிக்சல் முன் பெசிங் கேமராவைக் காணலாம். இதன் பேட்டரி பவர் 5000mAh என கூறப்படுகிறது, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வரும்.
இதையும் படிங்க:Scam: MS Dhoni பெயரை பயன்படுத்தி புதிய முறையில் பணம் பறிப்பு மக்களே உஷார்