Samsung யின் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க

Samsung யின் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க
HIGHLIGHTS

Samsung Galaxy F55 5G இந்தியாவில் அறிமுகம் செய்தது

இந்த ஸ்மார்ட்போன் குவல்கம் ஸ்னப்ட்ரகன் 7 ஜென் SoC கொண்டுள்ளது

இரண்டு கலர் விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Samsung Galaxy F55 5G இந்தியாவில் அறிமுகம் செய்தது இந்த ஸ்மார்ட்போன் குவல்கம் ஸ்னப்ட்ரகன் 7 ஜென் SoC கொண்டுள்ளது, மேலும் இதில் போட்டோக்ராபிக்கு 50MP டிரிபிள் ரியர் கேமரா யூனிட் மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொண்டுள்ளது. இது வேகன் லெதர் பினிஷ் கொண்ட இரண்டு கலர் விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Samsung Galaxy F55 5G இந்தியாவில் விலை தகவல்

Samsung Galaxy F55 5G ஆனது இந்தியாவில் மூன்று ரேம் மற்றும் ஸ்டோரேஜ்கான்பிக்ரேசனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படை 8GB + 128GB வேரியண்டின் விலை இந்தியாவில் ரூ.26,999. மற்ற இரண்டு வகைகளும் 8GB + 256GB மற்றும் 12GB + 256GB ஸ்டோரேஜ் உடன் வருகின்றன, அவை முறையே ரூ.29,999 மற்றும் ரூ.32,999 விலையில் உள்ளன. Galaxy F55 5G வேகன் லெதர் பினிஷுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் கசடமர்கள் அதை Apricot Crush அல்லது Resin Black கலர் விருப்பங்களில் வாங்கலாம்.

Samsung Galaxy F55 5G டாப் அம்சங்கள்.

டிஸ்ப்ளே

Samsung Galaxy F55 5G டூயல் சிம் (நானோ, ஹைப்ரிட்), ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான One UI 6.1 இல் இயங்குகிறது. இது 6.55-இன்ச் FHD+ (2,400 x 1,080 பிக்சல்கள்) Super AMOLED Plus டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 120Hz ரெப்ராஸ் ரெட்டை சப்போர்ட் செய்கிறது

ப்ரோசெசர்

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 1 SoC மூலம் இயக்கப்படுகிறது, 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான உள் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ SD கார்டு மூலம் ஸ்டோரேஜ் 1TB வரை விரிவாக்கலாம். நான்கு முக்கிய ஆண்ட்ராய்டு மேம்படுத்தல்கள் மற்றும் ஐந்து வருட செக்யுரிட்டி அப்டேட்களை வழங்குவதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது.

கேமரா

Samsung Galaxy F55 5G யின் கேமரா பற்றி பேசினால், இதில் மூன்று பின்புற கேமரா செட்டப் வழங்கப்படுகிறது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேப்லைசெசன் உடன் f1.8 அப்ரட்ஜர் கொண்ட 50 மேகபிக்சல் ப்ரைமரி சென்சார் கொண்டுள்ளது, மேலும் இந்த போனில் f2.2 அப்ரட்ஜர் கொண்ட 8-மேகபிக்சல் செகண்டரி கேமரா மற்றும் மூன்றவதாக் f2.4 அப்ரட்ஜர் கொண்ட 2-மேகபிக்சல் சென்சார் கொண்டுள்ளது, இதில் பின்புற அமைப்பானது 30 fps யில் 4K ரெக்கார்டிங் மற்றும் HD ரெசளுசனில் 240fps ஸ்லோ மோஷன் ரெக்கார்டிங் செய்ய முடியும். முன் கேமரா f2.4 அப்ரட்ஜர் கூடிய 50 மெகாபிக்சல் சென்சார் உடன் வருகிறது.

பேட்டரி

இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால், 5,000mAh பேட்டரியுடன் 45W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது,

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி இணைப்பு அம்சங்களில் 4G LTE, 5G, டூயல்-பேண்ட் Wi-Fi, புளூடூத் 5.2 GPS, NFC, GLONASS, கலிலியோ மற்றும் USB டைப்-சி (2.0) ஆகியவை அடங்கும். இதில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது. புதிய சாம்சங் ஃபோன் நிறுவனத்தின் சொந்த நாக்ஸ் பாதுகாப்பு மென்பொருளால் பாதுகாக்கப்படுகிறது. இதன் எடை 180 கிராம் மற்றும் 163.9 x 76.5 x 7.8 மிமீ அளவைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: Motorola யின் அசத்தலான Moto ஸ்மார்ட்போன் மே 30 என்ட்ரி

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo