Samsung Galaxy F55 5G அறிமுகத்திற்க்கு முன்னே தகவல் லீக்

Samsung Galaxy F55 5G அறிமுகத்திற்க்கு முன்னே தகவல் லீக்
HIGHLIGHTS

Samsung Galaxy F55 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது

இந்த ஃபோனைப் பற்றிய பல முக்கிய தகவல்கள் புதன்கிழமை கீக்பெஞ்ச் லிஸ்ட்டிலிருந்து

ஃபோனில் Qualcomm ப்ரோசெசர் இருக்கும் மற்றும் 5000 mAh பேட்டரியை சப்போர்ட் செய்யும்

Samsung Galaxy F55 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஃபோனைப் பற்றிய பல முக்கிய தகவல்கள் புதன்கிழமை கீக்பெஞ்ச் லிஸ்ட்டிலிருந்து பெறப்பட்டன. இப்போது ஒரு இணையதளம் வரவிருக்கும் சாம்சங் போனின் விலையை அதன் அனைத்து முக்கிய அம்சங்களுடன் லீக் ஆகியுள்ளது Galaxy F55 ஸ்மார்ட்போன் 8 முதல் 12 ஜிபி ரேம் விருப்பங்களில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. ஃபோனில் Qualcomm ப்ரோசெசர் இருக்கும் மற்றும் 5000 mAh பேட்டரியை சப்போர்ட் செய்யும்

Samsung Galaxy F55 5G தகவல் லீக்

ஒரு அறிக்கையின் படி Galaxy F55 5G யில் மூன்று மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, இதன் அடிப்படை வேரியன்ட் 8ஜிபி/128ஜிபி இருக்கும். அதன் பிறகு 8ஜிபி/256ஜிபி மாடலும், மூன்றாவது மாடல் 12ஜிபி/256ஜிபியும் இருக்கும். Galaxy F55 5G போனின் அடிப்படை வேரியண்டிர்க்கு ரூ.26,999 விலை இருக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்தடுத்த மாடல்களின் விலை முறையே ரூ.29,999 மற்றும் ரூ.32,999. இந்த போனில் பேங்க் கார்டு தள்ளுபடியையும் நிறுவனம் வழங்கும், இதன் மூலம் ஒவ்வொரு மாடலின் விலையும் குறைந்தது ரூ.2 ஆயிரம் குறைக்கப்படும்.

Samsung Galaxy F55 5G யின் Geekbench லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இதை பற்றிய தகவல் twittar(X ) பக்கத்திலும் தகவல் பகிரப்பட்டுள்ளது Qualcomm யின் ‘Snapdragon 7 Gen 1’ செயலி இந்த போனில் வழங்கப்படும் என்று தெரிவிக்கிறது. ப்ரோசெசரின் பெயர் பட்டியலில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், CPU தகவல் மற்றும் GPU விவரங்களிலிருந்து அதை ஊகிக்க முடியும்.

மற்ற சிறப்பம்சங்கள் பற்றி பேசுகையில் இதில் பற்றி பேசுகையில், Galaxy F55 5G ஃபோன் முழு HD + ரேசளுசனுடன் 6.7 இன்ச் சூப்பர் AMOLED + இன்ஃபினிட்டி O டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 1000 நிட்களின் உச்ச பிரகாசத்துடன் வரும். இந்த போனில் Snapdragon 7 Gen 1 ப்ரோசெசர் இருக்கும் இருக்கும்.

Galaxy F55 5G மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். முக்கிய சென்சார் 50MP ஆக இருக்கும். அதனுடன், 8MP மற்றும் 2MP சென்சார்கள் வழங்கப்படும், போனில் 50MP முன் கேமரா இருக்கும். இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5000 mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க Amazon Great Summer Sale 55 இன்ச் TV ஆபர் விலையில் வாங்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo