Samsung Galaxy F54 5G விரைவில் இந்தியாவில் 108MP கேமரா, 8GB ரேம் போன்

Updated on 10-May-2023
HIGHLIGHTS

Samsung விரைவில் Samsung Galaxy F54 5G பல்வேறு சந்தைகளில் அறிமுகப்படுத்த உள்ளது.

சமீபத்தில், Galaxy F54 5G க்கான ஆதரவுப் பக்கம், இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள Samsung யின் பிராந்திய வெப்சைட்களில் காணப்பட்டது.

Samsung Galaxy F54 5G இன் சிறப்பம்சங்கள் மற்றும் ஸ்பெசிபிகேஷன்கள்

Samsung விரைவில் Samsung Galaxy F54 5G பல்வேறு சந்தைகளில் அறிமுகப்படுத்த உள்ளது. சமீபத்தில், Galaxy F54 5G க்கான ஆதரவுப் பக்கம், இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள Samsung யின் பிராந்திய வெப்சைட்களில் காணப்பட்டது. அதனால்தான் Samsung யின் வரவிருக்கும் போன் இந்த சந்தைகளில் விரைவில் தட்டுப்படும் என்று தெரிகிறது. Samsung Galaxy F54 5G இன் சிறப்பம்சங்கள் மற்றும் ஸ்பெசிபிகேஷன்கள் பற்றி இங்கு விரிவாகக் கூறுகிறோம்.

Galaxy F54 5G க்கான சப்போர்ட் பக்கம் இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள Samsung பிராந்திய வெப்சைட்களில் காணப்பட்டது. Samsung Galaxy F54 5G மாடல் எண் SM-E546B/DS Samsung India மற்றும் Samsung Bangladesh வெப்சைட்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதே மாதிரி எண்ணைக் கொண்ட டிவைஸ் மார்ச் மாதத்தில் இந்தியாவின் BIS அதிகாரத்தின் டேட்டாபேஸில் காணப்பட்டது.

Samsung Galaxy F54 5G இன் ஸ்பெசிபிகேஷன்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. Samsung யின் எப்-சீரிஸ் என்பதால், இந்த போனை இ-காமர்ஸ் வெப்சைட் Flipkart இருந்து விற்கலாம். இப்போது Samsung வெப்சைட்டில் வெளிவந்துள்ளதால், Samsung Galaxy F54 இந்த மாத தொடக்கத்தில் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் நுழைய வாய்ப்பு உள்ளது. இருப்பினும், போனின் ஸ்பெசிபிகேஷன்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
 
Samsung Galaxy F54 5G யின் எதிர்பார்க்கப்படும் ஸ்பெசிபிகேஷன்கள்
Samsung Galaxy F54 5G ஆனது மத்திய கிழக்கில் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy M54 5G இன் ரீபிராண்ட் வெர்சனாக இருக்கலாம். எனவே, இது 6.7 இன்ச் FHD+ S-AMOLED டிஸ்ப்ளேவுடன் வர வாய்ப்புள்ளது, இது 120Hz ரிபெரேஸ் ரெட் சப்போர்ட் செய்யும். இது Exynos 1380 சிப்செட், 8GB ரேம் மற்றும் 128GB/256GB ஸ்டோரேஜ் மற்றும் 25W சார்ஜிங் கொண்ட 6,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

Galaxy F54 5G இல் 32 மெகாபிக்சல் முன் கேமராவைக் காணலாம். அதே நேரத்தில், OIS சப்போர்டுடன் 108-மெகாபிக்சல் முதல் கேமரா, 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றை அதன் பின்புற கேமரா செட்டப்பில் காணலாம். இந்த போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான One UI 5.1 உடன் வரலாம். செப்பிடிற்காக சைடு மௌன்டேட்டில் இருக்கும் பிங்கர் ஸ்கேனரைக் காணலாம்.

Connect On :