6000mAh பேட்டரி உடன் Samsung யின் அசத்தலான போன் அறிமுகம்

Updated on 04-Mar-2024
HIGHLIGHTS

சாம்சங் அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன Samsung Galaxy F15 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும்

புதிய ஸ்மார்ட்போன் 90Hz ரெப்ராஸ் ரேட்டுடன் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது

. Samsung Galaxy F15 5G பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

சாம்சங் அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன Samsung Galaxy F15 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன் 90Hz ரெப்ராஸ் ரேட்டுடன் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது மற்றும் MediaTek Dimensity 6100+ SoC யில் வேலை செய்கிறது. இந்த போன் மூன்று வெவ்வேறு கலர் விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் பெரிய பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. Samsung Galaxy F15 5G பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

Samsung Galaxy F15 இந்திய விலை தகவல்.

Samsung Galaxy Galaxy F15 5G யின் விலையை பற்றி பேசினால், 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.15,999. அதேசமயம் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.16,999. இந்த ஸ்மார்ட்போன் Ash Black, Groovy Violet மற்றும் Jazzy Green கலர்களில் கிடைக்கிறது. இது தற்போது Flipkart யில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது இதன் முதல் விற்பனை இன்று இரவு 7:00 மணிக்கு தொடங்குகிறது. இந்த விற்பனையின் போது 1,299ரூபாய் மதிப்புள்ள Travel Adapter 299 யில் வாங்கலாம்.

#Samsung Galaxy F15 price details

Galaxy F15 சிறப்பம்சம்

Samsung Galaxy F15 5G யின் சிறப்பம்சம் பற்றி பேசினால், இதில் ஒரு 6.5 இன்ச் முழு HD+ sAMOLED டிஸ்ப்ளே உடன் 90Hz ரெப்ராஸ் ரேட் உடன் வருகிறது. இந்த போனில் MediaTek Dimensity 6100+ப்ரோசெச்சர் உடன் வருகிறது

கேமரா செட்டப் பற்றி பேசுகையில் கேலக்ஸி F15 5G யின் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாவது கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

Samsung Galaxy F14 5G

Samsung Galaxy F15 5G ஆனது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான One UI 5 யில் இயங்குகிறது. சாம்சங் 5 ஆண்டுகள் வரை செக்யூரிட்டி அப்டேட்களையும் புதிய ஃபோன்களுக்கு 4 வருட OS அப்டேட்களையும் உறுதியளிக்கிறது. இந்த ஃபோனில் 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் 1TB வரை அதிகரிக்ககொடிய இந்த ஃபோன் பெரிய 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது இரண்டு நாட்கள் பேட்டரி ஆயுள் மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 25 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது.

இதையும் படிங்க: Redmi யின் இந்த இரு ஸ்மார்ட்போன்களின் விலை அதிரடி குறைப்பு

கனேக்ட்டிவிட்டி விருப்பங்களை பற்றி பேசினால், இதில் 5G, Wi-Fi 02.11a/b/g/n/ac, ப்ளூடூத் 5.3, GPS, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். ஆன்போர்டு சென்சார்களில் முடுக்கமானி, கைரோ சென்சார், ஜியோமேக்னடிக் சென்சார், லைட் சென்சார் மற்றும் விர்ச்சுவல் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்காக கைரேகை சென்சார் உள்ளது. பரிமாணங்களைப் பற்றி பேசுகையில், தொலைபேசியின் நீளம் 160.1 mm, அகலம் 76.8 mmதிக்னஸ் 8.4 mm மற்றும் எடை 217 கிராம் ஆகும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :