samsung Galaxy A6 மற்றும் samsung Galaxy A 6 Plus புதிய இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்ட புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள்
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது .
சாம்சங் கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கசிந்திருந்தது. எனினும் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதேபோனஅற டிஸ்ப்ளே கேலக்ஸி ஏ8 (2018) மற்றும் கேலக்ஸி ஏ8 பிளஸ் 2018 ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போன்களிலும் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, 1080×2220 பிக்சல், 18:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 சிப்செட், 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், 4 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக அமெரிக்காவின் FCC லிஸ்டிங்கில் வெளியான தகவல்களில் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள் ஆன்ட்ராய்டு ஓரியோ சார்ந்த சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.0 கொண்டிருக்கும் என்றும் இவற்றின் ஹோம் பட்டன் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களின் படி கேலக்ஸி ஏ6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile