சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி வந்த நிலையில், தற்சமயம் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதிய கேலக்ஸி ஏ6 (SM-A600F) மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் (SM-A605F) ஸ்மார்ட்போன்களில் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி 18:5:9 ரக டிஸ்ப்ளே, கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், கேலக்ஸி ஏ6 பிலஸ் ஸ்மார்ட்போனில் 6.0 இனஅச் FHD பிளஸ் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களிலும் 16 எம்பி பிரைமரி கேமரா, F/1.7 அப்ரேச்சர், கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, லைவ் ஃபோகஸ் மோட் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் புகைப்படங்களில் டெப்த் கன்ட்ரோல் செய்யும் என்பதோடு, புகைப்படம் எடுக்கப்பட்டதும் பொக்கோ எஃபெக்ட் சேர்க்கும் வசதியும் வழங்கப்படுகிரது.
கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனில் 16 எம்பி செல்ஃபி கேமரா, கேலக்ஸி ஏ6 பிளஸ் 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மெல்லிய மெட்டல் வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட டியூரபிலிட்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் முக அங்கீகார வசதி (Face Recognition), கைரேகை சென்சார், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, பிக்ஸ்பி விஷன், ஹோம் மற்றும் ரிமைன்டர், சாம்சங் பே உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ6 சிறப்பம்சங்கள்:
– 5.6 இன்ச் 1480×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 14nm பிராசஸர்
– மாலி T830 GPU
– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7 அப்ரேச்சர்
– 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9 அப்ரேச்சர்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்ஏஹெச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஏ6 பிளஸ் சிறப்பம்சங்கள்:
– 6.0 இன்ச் 1080×2220 பிக்சல் FHD பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 14nm பிராசஸர்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7 அப்ரேச்சர்
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.9 அப்ரேச்சர்
– 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9 அப்ரேச்சர்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3500 எம்ஏஹெச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பிளாக், கோல்டு, புளு மற்றும் லாவென்டர் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை மே மாத வாக்கில் துவங்கும் என எதர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பிய, ஆசிய மறஅறும் லத்தின் அமெரிக்க சந்தைகளில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் விலை குறித்து எவ்வித தகவலும் இல்லை.